Snehan-Kanika: பாடலாசிரியர் சினேகன் மற்றும் கனிகா தம்பதியினருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் கடந்த ஜனவரி மாதம் பிறந்தது.
இந்த குழந்தைகளுக்கு இவர்கள் வைத்திருக்கும் பெயர் தற்போது இணையத்தில் பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.
பாடல் ஆசிரியர் சினேகன் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தன்னுடைய நீண்ட நாள் காதலி கனிகாவை திருமணம் செய்து கொண்டார்.
நயன்-விக்கியை மிஞ்சிய சினேகன்-கனிகா
உண்மையை சொல்லப்போனால் கனிகா வந்த பிறகுதான் சினேகனுக்கு அதிகமான புகழ் வெளிச்சம் வந்தது என்று சொல்லலாம்.
தன்னுடைய கணவர் எழுதிய நிறைய பாடல்களை மக்களுக்கு எடுத்துச் சொன்னது கனிகா தான். அதுமட்டுமில்லாமல் அவர் இணையதளத்தில் போடும் பதிவுகள் மக்களால் அதிக அளவில் ரசிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் இவர்களுக்கு கடந்த ஜனவரி 25ஆம் தேதி இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருப்பதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார்கள்.
இந்த நிலையில் மக்கள் நீதி மைய தலைவரும் நடிகருமான கமலஹாசனை தங்களுடைய குழந்தைகளுடன் நேரில் சந்தித்திருக்கிறார்கள்.
கமலஹாசனின் ஆசீர்வாதத்தை பெற்றதோடு அவர் முன்னிலையில் தங்கள் குழந்தைகளுக்கு காதல் மற்றும் கவிதை என பெயர் வைத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என்ற பெயர் வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த காதல் மற்றும் கவிதை என்ற பெயரும் மக்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
![Snekan Kannika](https://www.cinemapettai.com/wp-content/uploads/2025/02/Screenshot-2025-02-15-091735-1024x446.png)