புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

விஜய் மாதிரி பண்ணனும்னா இப்படி செய்.. பிரசன்னாவுக்கு செக் வைத்த சினேகா

புன்னகை இளவரசி என்ற பெயர் பெற்ற சினேகா தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்து கொண்டிருந்தார். விஜய், அஜித், கமல், விக்ரம் என இவர் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். ஹோம்லி லுக்கில் இருப்பதால் குடும்ப பங்கான கதாபாத்திரங்கள் அதிகம் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் சினேகா, பிரசன்னா உடன் இணைந்து அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றார்கள். மேலும் சமீபத்தில் சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தனர்.

அதாவது கல்யாணமான புதிதில் சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் ஹனிமூன் சென்றிருந்தார்களாம். அப்போது குஷி படத்தில் விஜய் காலில் கயிறை கட்டிக்கொண்டு புங்கீ ஜம்பிங் செய்வார். அதை நாமும் செய்யலாம் என்ற பிரசன்னா சினேகாவை அழைத்திருக்கிறார்.

Also Read : ஆளும் கட்சி எதிர்க்கட்சியின் 60% ஓட்டு விஜய்க்கு தான்.. அடித்து சொல்லும் அரசியல் சாணக்கியன் கணிப்பு

இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு பிரசன்னாவுக்கு சினேகா செக் வைத்திருக்கிறார். அதாவது என் பெயரை டாட்டூ போட்டுக் கொண்டால் தான் நான் வருவேன் என்று கூறி இருக்கிறார். வேறு வழியில்லாமல் உடனடியாகவே பிரசன்னா தனது உடலில் சினேகாவின் பெயரை டாட்டூ போட்டுக் கொண்டுள்ளார்.

அதன் பிறகு இருவரும் அதில் சென்றதாக பிரசன்னா கூறியிருந்தார். இந்நிலையில் சினேகா மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நிலையில் பல படங்களில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Also Read : விஜய்க்கு சொன்ன அரசியல் கதை, உடனே ஓகே சொன்ன TVK தலைவர்.. மிரட்டி விடப் போகும் சூர்யா பட இயக்குனர்

Trending News