வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சினேகாவின் முதல் கல்யாணம் நின்றதற்கு காரணம் இதுதான்! தயாரிப்பாளரை உருகி உருகி காதலித்தாராமே!

தமிழ் சினிமாவில் அழகிய ஜோடியாக வலம் வரும் பிரசன்னா மற்றும் சினேகாவின் திருமண வாழ்க்கையில் குண்டு போடும் விதமாக சினேகாவின் முன்னாள் காதலர் பற்றிப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் பிரபல நடிகர்.

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் தான் சினேகா. அழகு சிலை போல் இருக்கும் சினேகா தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் ராணியாக வலம் வந்தவர். ஒரு கட்டத்தில் மார்க்கெட் சரிந்த பிறகு பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு சில நாட்கள் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட சினேகாவுக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் சினேகா. இடையில் சில தெலுங்கு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ள சினேகா சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

sneha-cinemapettai
sneha-cinemapettai

தற்போது சந்தோசமாக இருக்கும் சினேகாவின் வாழ்க்கையில் ஒரு கசப்பான சம்பவம் நடந்துள்ளது. பிரசன்னாவுக்கு முன்பே சினேகா பிரபல தயாரிப்பாளர் ஒருவரை உருகி உருகி காதலித்து வந்தாராம். ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் முற்றி திருமணம் செய்ய முடிவு பண்ணி நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்களாம்.

ஆனால் நிச்சயதார்த்தத்திற்கு பிறகு சினேகாவின் காதலரின் நடத்தையில் சில சந்தேகங்கள் சினேகாவுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் சினேகாவுக்கு அவர் உண்மையாக இல்லை என்பதையும் சினேகா உணர்ந்து விட்டாராம். முதலில் திருந்தி விடுங்கள் என சொல்லி பார்த்துள்ளார். ஆனால் தன் இஷ்டத்திற்கு அலைந்த தயாரிப்பாளரை நிச்சயதார்த்தத்துடன் உதறித்தள்ளி விட்டாராம் சினேகா.

அதன்பிறகு திருமணமே வேண்டாம் என்றிருந்த சினேகாவுக்கு பிரசன்னாவின் காதல் வரப்பிரசாதமாக கிடைத்துள்ளது. தற்போது இருவரும் தமிழ் சினிமாவின் சிறந்த காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Trending News