திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவாவுக்கு தங்கச்சியாக நடித்தது சினேகா முரளி.. தற்போது எப்படி உள்ளார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஒருசில கதாநாயகிகள் மட்டுமே முதல் படத்திலேயே வெற்றி பெறுகின்றனர். அப்படி சிவா மனசுல சக்தி என்ற படத்தில் ஜீவாவுக்கு தங்கச்சியாக நடித்தவர்தான் சினேகா முரளி. இப்படத்தில் இவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் பிடித்துப்போக அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் நடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அதன் பிறகு இவருக்கு சரிவர பட வாய்ப்புகள் வராததால் சினிமாவை விட்டு விலகி உள்ளார். இருப்பினும் ஒரு சிலர் கதைகளை கூறுவதாகவும் ஆனால் அந்த கதைகளில் எதுவுமே சினேகா முரளிக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரமாகவே இருப்பதால் பல கதைகளையும் நிராகரித்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

சிவா மனசுல சக்தி படத்தில் இவருடைய காமெடி கதாபாத்திரம் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் குறிப்பாக ஜீவாவுடன் இவர் செய்யும் சேட்டைகள், ஜீவாவிற்கு பல்பு கொடுக்கும் வசனங்கள் என படத்தில் பல இடங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியிருப்பார்.

sneha Murali
sneha Murali

சிவா மனசுல சக்தி படத்திற்கு பிறகு இவர் எந்த படத்திலும் நடிக்காமல் தற்போது இசையின் மீது கவனம் செலுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல்  சமூக வலைதளங்களில் இவர் இசையில் பல பாடல்கள் பாடியுள்ளார். அதனால் விரைவில்  இசை துறையில் நுழைந்து விடுவார் என பலரும் கூறுகின்றனர்.

தற்போது இவர் அவரது சமூக வலைதள பக்கத்தில் மரத்தை பிடித்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம சிவா மனசுல சக்தி  படத்தில் நடித்த சினேகா முரளியா இப்படி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் என கூறி வருகின்றனர். மேலும் பலரும் செம அழகாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். 

Trending News