சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

நடிகரையும் தொழிலதிபரையும் ஒரே நேரத்தில் டாவு விட்ட சினேகா.. அதுல ஸ்ரீகாந்த் தான் பாவம்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே புன்னகை அரசி என்ற பட்டத்துடன் நீண்ட நாட்களாக வலம் வருபவர் தான் சினேகா. ஆனால் தற்போது வரை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.

அவரும் முன்னணி நடிகையாக வலம் வர பல முயற்சிகள் செய்து விட்டார். ஆனால் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் அனைத்திலுமே இரண்டாம்கட்ட நடிகையாகவே வலம் வந்தார். இல்லை என்றால் மார்க்கெட் இல்லாத நடிகர்களுக்கு ஜோடியாக விடுவார்.

ஆனால் மற்ற மொழிகளில் அப்படி இல்லை. கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். அப்படிப்பட்ட சினேகா தன்னுடைய வாழ்க்கையில் ஒரே நேரத்தில் இரண்டு பேரை காதலித்ததாக அப்போதே பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.

நடிகைகள் வாழ்க்கையில் காதல் சிக்கல் வருவது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் ஆரம்ப காலத்தில் அருமையான ஜோடி என்று ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டவர்கள்தான் ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா. இவர்கள் இருவருக்குள்ளும் காதல் வளர்ந்ததாக சொல்கிறார்கள்.

சினேகா ஸ்ரீகாந்தை காதலிக்கும் அதே நேரத்தில் மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரையும் காதலித்து வந்ததாகக் கூறுகின்றனர். ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்தை கழட்டி விட்டுவிட்டு அந்த தொழிலதிபருடன் அவருக்கு நிச்சயம் நடந்ததாகவும் ஒரு செய்தி உள்ளது.

கடைசியில் இரண்டும் கெட்டானாக நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். என்னதான் முன்னணி நடிகைகள் பெரிய அளவு ரகசியங்களை மறைத்தாலும் அது எப்படியாவது ஒரு வகையில் வெளிவந்து விடும். இது புரியாமல் சினேகா செய்துவந்த காதல் வேலை வெளியாகி அவரது கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டதாம். இதனால்தான் அவசர அவசரமாக பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறுகின்றனர்.

sneha-cinemapettai
sneha-cinemapettai

Trending News