புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சினேகா ஆரம்பிக்கும் புது பிசினஸ்.. சம்பாதித்த மொத்தத்தையும் தரமாக முதலீடு செய்யும் சிரிப்பழகி

Sneha Start New Business: பொதுவாக நடிகர், நடிகைகள் அனைவரும் நடிப்பை மட்டும் நம்பாமல் சம்பாதிப்பதை சொந்த தொழிலில் முதலீடு செய்வது வழக்கம். அதில் பல ஹீரோக்கள் ஹோட்டல், திருமண மண்டபம் என பிசினஸ் தொடங்கி கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர்.

தற்போது ஹீரோக்களைப் போல் நடிகைகளும் படு உஷாராக தங்கள் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். அதில் நயன்தாரா ஏகப்பட்ட பிசினஸ்களை செய்து கல்லாகட்டி வருகிறார். அவரைப் போலவே பல ஹீரோயின்கள் பேஷன் தொடர்பான பிசினஸ், காபி ஷாப் என கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இதில் சிரிப்பழகி சினேகாவும் தற்போது புது பிசினஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே பண்ருட்டியில் இவருக்கு சொந்தமாக திருமண மண்டபம் இருக்கிறது. அதை அடுத்து தற்போது அவர் சினேகாலயா சில்க்ஸ் என்ற துணிக்கடையை ஆரம்பிக்க இருக்கிறார்.

Also read: பிரசன்னாவிற்கு முன் தயாரிப்பாளருடன் நடந்த விஷயம்.. சினேகாவை பற்றி புட்டு புட்டு வைத்த பயில்வான்

வரும் 12ஆம் தேதி இந்த கடை படு ஜோராக திறக்கப்பட இருக்கிறது. அதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கும் சினேகா முன்னணி பிரபலங்கள் அனைவருக்கும் அழைப்பிதழை அனுப்பிக் கொண்டிருக்கிறாராம்.

இப்படி பிசினஸில் தீவிர ஆர்வம் காட்டி வரும் சிரிப்பழகி நடிப்பையும் விடாமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் இவர் விஜய்யின் கோட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.

சமீபத்தில் மைக் மோகன் உடன் இவர் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவையே கலக்கியது. அதை அடுத்து இவருடைய பிசினஸ் பற்றிய செய்தியும் வைரலாகி வருகிறது. புது தொழிலை அமோகமாக ஆரம்பிக்கும் சினேகாவுக்கு தற்போது பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Also read: கோட் படத்தில் இப்படி ஒரு செம ஜோடியா.? வைரலாகும் புகைப்படம்

Trending News