வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

23 வருட சினிமா வாழ்க்கையில் சினேகா சேர்த்து வைத்த சொத்து.. பிசினஸிலும் கல்லாக்கட்டும் சிரிப்பழகி

Actress Sneha: நடிகைகளுக்கு அழகு என்பது மிகப்பெரிய ஒரு விஷயமாக தான் சினிமாவில் பார்க்கப்பட்டு வருகிறது. அதிலும் கண்ணுக்கு லட்சனமாகவும் பார்த்தவுடனே பிடித்தால் மட்டுமே அவர்களுக்கான வரவேற்பு மக்களிடம் அதிகரித்து வரும். இந்த விஷயத்தில் நடிகை சினேகா ரொம்பவே கொடுத்து வச்சவர். அவருடைய பிரகாசமான முகமும், கள்ள கபடமற்ற சிரிப்பும் அனைவரையும் கவர்ந்தது.

அப்படிப்பட்ட இவர் என்னவளே படத்தின் மூலம் அறிமுகமாகி ஆனந்தம், பார்த்தாலே பரவசம், புன்னகை தேசம், போன்ற பல படங்களில் நடித்து இவருக்கான ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். அத்துடன் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொண்டார். அதன் பின் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைக்கு தாயாக வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

இதற்கு இடையில் அவ்வப்போது கிடைக்கும் கதாபாத்திரங்களிலும் தன்னுடைய முகத்தை சினிமாவில் காட்டிக் கொள்கிறார். அத்துடன் நடிப்பையும் தாண்டி ரியாலிட்டி ஷோவின் ஜட்ஜ் ஆகவும், விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி கேரியரை தக்க வைத்துக் கொள்கிறார்.

Also read: 2023-இல் இன்ஸ்டாவில் அதிக ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் 6 ஹீரோக்கள்.. விஜய்யை பின்னுக்கு தள்ளிய ஹீரோ

நடிகையாக நடித்த பல படங்களில் இவருக்கு பணமழை கொட்ட ஆரம்பித்த படம் என்னவென்றால் வசீகரா. இப்படத்தில் விஜய்க்கு ஜோடி சேர்ந்த பிறகு சினேகாவின் மார்க்கெட்ட லெவல் கூடிவிட்டது. இதனைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பின் மறுபடியும் விஜய் கூட நடிப்பதற்காக தளபதி 68 படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.

அடுத்து நடிப்பையும் தாண்டி பிசினஸ்லையும் களம் இறங்கி விட்டார். ரியல் எஸ்டேட் மற்றும் வீடுகளுக்கு இன்டீரியர் டிசைன் பண்ணுவதிலும் ஆர்வம் காட்டி பணம் சம்பாதித்து வருகிறார். அத்துடன் ஒரு படத்திற்கு இவர் கமிட்டாகிட்டால் இவருடைய கதாபாத்திரத்துக்காக வாங்கக்கூடிய சம்பளம் 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை.

இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட சினேகாவிடம் தற்போது 45 கோடி முதல் 50 கோடி வரை சொத்து மதிப்புகள் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அத்துடன் நடிகர் பிரசன்னாவும் தற்போது வில்லன் கேரக்டரிலும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இப்படி கணவன் மனைவிகள் சேர்ந்து சினிமாவில் பயணித்து வருகிறார்கள்.

Also read: வெங்கட் பிரபுவோடு ஷாட் பூட் த்ரீ விளையாடும் சினேகா.. ட்ரெண்டாகும் ட்ரெய்லர்

Trending News