மைக் மோகன் ஒரு காலத்தில் ரஜினி மற்றும் கமல் போன்ற நடிகர்களுக்கு டஃப் கொடுத்து வந்தார். இவரும் சினிமாவில் மிகப்பெரிய ஆளாக வருவார் என எதிர்பார்த்த நிலையில் இருக்கிற இடம் கூட தெரியாமல் காணாமல் போய்விட்டார். இதற்கு காரணம் இவருடைய குரல்தான். இவருக்கு மைக் மோகன் என்று பெயர் வர காரணம் இவரது படங்களில் நிறைய மேடை பாடல்கள் இடம் பெறும்.
மேலும் இவரது குரலுக்காகவே படத்தை பார்க்க ரசிகர் கூட்டம் அலை மோதும். ஆனால் அது மைக்மோகனின் நிஜ குரல் கிடையாது. அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் மோகனின் நண்பர் சுரேந்தர் என்பவர். ஆரம்பத்தில் இவருடைய எல்லா படங்களுக்கும் சுரேந்தர் தான் குரல் கொடுத்து வந்தார்.
Also Read : 66 வயதிலும் ஹரா படப்பிடிப்பில் வித்தை காட்டிய மைக் மோகன்.. மூக்கில் விரலை வைத்த படக்குழு
ஒரு கட்டத்திற்கு மேல் என்னுடைய குரலால் தான் மோகனின் படங்கள் வெற்றி பெறுவதாக சுரேந்தர் கூறினார். இதனால் இவர்கள் இடையே பெரும் பிரச்சனை வெடிக்க ஆரம்பித்தது. ஆகையால் அதன் பின்பு மோகன் படத்தில் டப்பிங் பேச சுரேந்தர் மறுத்துவிட்டார். இதனால் மோகன் படமும் சரிவர போகவில்லை.
இதைத் தொடர்ந்து படங்கள் தொடர் தோல்வி அடைந்து அடைய சினிமாவை வேண்டாம் என மோகன் ஒதுங்கி விட்டார். மேலும் இப்போதாவது மீண்டும் சினிமாவில் விட்டதை பிடிக்க வேண்டும் என ஹரா படத்தில் கதாநாயகனாக மோகன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Also Read : ரீ-என்ட்ரியில் மாஸாக வரும் வெள்ளிவிழா கண்ட 5 ஜாம்பவான்கள்.. மைக் மோகன் கதை தான் கொஞ்சம் பாவமா இருக்கு
ஆனால் இந்த படத்திலும் மோகனுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது இந்த படத்தில் மைக் மோகனுக்கு டப்பிங் யார் கொடுப்பது என்ற பிரச்சனை தான். ஏனென்றால் எப்போதுமே மோகன் படத்திற்கு குரல் தான் பிளஸ் பாயிண்ட். அதனால் அப்போது அவருடைய குரலுக்கு ஏற்றவாறு டப்பிங் ஆர்டிஸை படக்குழு தேடி வருகிறதாம்.
இதனால் இப்போது ஹரா படத்தின் வேலைகள் நிலுவையில் உள்ளது. இவ்வாறு மைக் மோகன் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் சமயத்தில் ஒவ்வொரு பிரச்சனையாக தலை தூக்கி உள்ளது. இது எல்லாவற்றையும் சமாளித்து ஹரா படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் மைக் மோகன் ரசிகர்கள் உள்ளனர்.
Also Read : நடிப்பே வேண்டாம் என ஒதுங்கிய மார்க்கண்டேயன்.. ராமராஜன், மோகன் போல் இல்லாமல் ஒதுங்கும் சீனியர்