வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

படமே ஓடாத ஹீரோவுக்கு இவ்வளவு ஹெட் வெயிட்டா.. தனக்குத்தானே குழி வெட்டும் வாரிசு நடிகர்

தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் சம்பளம் படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக உள்ளது. வேறு வழி இல்லாமல் தயாரிப்பாளர்களும் பெரிய ஹீரோக்கள் கெட்ட சம்பளத்தை கொடுத்து படத்தை எடுத்து வருகிறார்கள். டாப் நடிகர்கள் என்பதால் அவரது ரசிகர்கள் படத்தை எப்படியும் வெற்றி அடைய செய்து விடுகிறார்கள்.

இதனால் தயாரிப்பாளருக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படவில்லை. ஆனால் தொடர்ந்து பிளாப் படங்கள் மட்டுமே கொடுத்து வரும் ஒரு இளம் நடிகர் சம்பளத்தை அதிகபடியாக கேட்டுள்ளாராம். அதாவது தற்போது வரை ஒரு தரமான ஹிட் படத்தை கொடுக்காத அந்த ஹீரோ எனக்கு இவ்வளவு சம்பளம், அவ்வளவு சம்பளம் வேண்டும் என தயாரிப்பாளர்களிடம் டீல் பேசி வருகிறாராம்.

Also Read : பெரிய இடத்தை பகைத்துக் கொண்ட மாஸ் ஹீரோ.. பிரச்சனையிலிருந்து தப்பிக்க பிளான் போடும் நடிகர்

ஏற்கனவே அந்த இளம் நடிகரின் போக்கு சரி இல்லை என சகட்டுமேனிக்கு கம்ப்ளைன்ட் வந்து கொண்டிருக்கிறது. இவருக்கு இப்போது யாரும் படம் கொடுக்கவும் தயாராக இல்லை. இப்போதுதான் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் இதிலும் சம்பளத்தில் பிரச்சனை செய்து வருகிறார்.

வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் நுழைந்த அதர்வா தான் தலைக்கால் புரியாமல் ஆடி வருகிறார். சமீபகாலமாக படப்பிடிப்புக்கு சரியாக வருவதில்லை என இவருக்கு பட வாய்ப்பு கொடுக்க இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

Also Read : இன்று ரிலீஸாகும் 5 படங்கள்.. வாழ்வா சாவா போராட்டத்தில் அதர்வா

ஆனால் தற்போது வீடு தேடி வந்த அதிர்ஷ்டம் போல ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் படத்தில் ஹீரோவாக அதர்வாவை போட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அதர்வா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். எந்த இளம் நடிகருக்கும் இது போன்ற வாய்ப்பு கிடைக்காது.

அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தெரியாத அதர்வா இந்த படத்திற்கு கோடிகளில் சம்பளம் வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கிறாராம். இவர் கேட்கும் சம்பளத்தை பார்த்து மொத்த யூனிட்டும் தலை சுற்றி உள்ளதாம். இதனால் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாதது போல இந்த வாய்ப்பையும் அதர்வா நழுவவிடப் போகிறார்.

Also Read : அதர்வாவுக்கு ரஜினியால் அடிக்க போகும் ஜாக்பாட்.. தலைவரை பாடாய் படுத்திய ஐஸ்வர்யா

Trending News