சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

வேட்டையனுக்கு பயந்து கோட்டையை விட்டு ஓடலாமா கங்குவா.. சூர்யாவை வம்பிழுக்கும் ஏடாகூடமான பிரபலம்

Suriya: சூர்யா நடிப்பில் இரண்டு வருடத்திற்கும் மேலாக உருவாகி வந்த கங்குவா அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டோடு பல மொழிகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

பல மாதங்களுக்கு முன்பே இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ரஜினியின் வேட்டையன் படமும் அதே நாளில் களமிறங்க இருக்கிறது. இதனால் ஒட்டு மொத்த திரையுலகமும் ஆர்வம் கலந்த பரபரப்போடு இருந்தது.

இதில் சூர்யா பின் வாங்குவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டது. அதை உறுதி செய்யும் பொருட்டு நேற்று நடந்த மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் அவர் வேட்டையனுக்கு வழி விடுவதாக கூறியுள்ளார்.

தள்ளி போகும் கங்குவா ரிலீஸ்

இதனால் ரசிகர்கள் ஒரு பக்கம் சூர்யாவை திட்டுவது கிண்டல் அடிப்பது என சோசியல் மீடியாவை ரணகளம் செய்து வருகின்றனர். மற்றொரு பக்கம் ப்ளூ சட்டை மாறன் அவரை வம்பிழுக்கும் விதமாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்.

kanguva-vettaiyan
kanguva-vettaiyan

அதில் போட்டி என்று வந்து விட்டால் தைரியமாக மோத வேண்டும். 2019-ல் பேட்ட படத்துடன் அஜித்தின் விசுவாசம் வெளிவந்து அதிக வசூலை பெற்றது. வேட்டையனுக்கு பயந்து கோட்டையை விட்டு ஓடலாமா சூர்யா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு சூர்யா ரசிகர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். தற்போது கங்குவா ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் தீபாவளிக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சிவகார்த்திகேயனின் அமரன் ரிலீஸ் அறிவிக்கப்பட்ட நிலையில் கங்குவா டீம் உச்சகட்ட குழப்பத்தில் இருக்கிறதாம்.

சூர்யாவை தேவையில்லாமல் சீண்டிப் பார்க்கும் ப்ளூ சட்டை

Trending News