சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

பிரபாஸால் சூர்யாவுக்கு வந்த சிக்கல்.. பற்றி எரியும் சோசியல் மீடியா

பாகுபலி திரைப்படத்தால் உலக அளவில் புகழ் பெற்றிருக்கும் பிரபாஸ் நடிப்பில் தற்போது ஆதிபுருஷ் என்ற அனிமேஷன் திரைப்படம் உருவாகி இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.

3டி அனிமேஷன் என்று கூறிவிட்டு குழந்தைகளுக்கான கார்ட்டூன் காட்சிகள் போன்று அந்த டீசர் இருந்ததால் ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டது. இதை அடுத்து படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. மேலும் இப்படம் ரிலீசானால் எதிர்பார்த்த அளவு வசூல் பெறாது என்று ரசிகர்கள் வெளிப்படையாகவே கூறி வந்தனர்.

Also read:பெரும் ஏமாற்றத்தை கொடுத்த ஆதிபுருஷ் டீசர்.. இதுக்கு விஜய் டிவி ராமாயணமே பரவால்ல

இந்த விஷயம் தான் தற்போது சூர்யா நடிக்கும் திரைப்படத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எப்படி என்றால் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் மோஷன் போஸ்டரில் இப்படம் 3டி முறையில் உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த விஷயத்தை தான் தற்போது ரசிகர்கள் சோசியல் இந்தியாவில் வேறு மாதிரி சித்தரித்து பரப்பி வருகின்றனர். அதாவது ஆதிபுருஷ் திரைப்படத்தை போன்று தான் சூர்யாவின் படமும் அனிமேஷன் முறையில் உருவாக்கப்படுகிறது. அதனால் படம் நிச்சயம் வரவேற்பை பெறாது என்று சிலர் சோசியல் மீடியாவில் பற்ற வைத்துள்ளனர்.

Also read:சூர்யா தவறவிட்ட 5 ஹிட் படங்கள்.. கைநழுவிப்போன ராஜமவுலியின் பட வாய்ப்பு

இதனால் சமூக வலைத்தளங்களில் ஒரு பிரளயமே ஏற்பட்டது. மேலும் இப்படி ஒரு விஷயம் பரவுவதற்கு காரணம் பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் தான் என்றும், அவருடைய ரசிகர்கள் தான் இப்படி ஒரு வேலையை செய்திருக்கிறார்கள் என்றும் சூர்யாவின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த விவகாரம் சர்ச்சையாக மாறியதை அடுத்து திரை உலகில் பலரும் இது அனிமேஷன் படம் தானா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் உண்மையில் இது 3டி முறையில் மட்டுமே உருவாக்கப்படுகிறது என்றும் அனிமேஷன் திரைப்படம் கிடையாது என்றும் படக்குழு தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

Also read:தொடர் தோல்விகளை சந்திக்கும் பிரபாஸ்.. ரிலீசுக்கு முன்பே நெகட்டிவ் விமர்சனங்களால் சரியும் மார்க்கெட்

Trending News