புதன்கிழமை, ஜனவரி 22, 2025

சாப்பிட என்ன பண்ணி இருக்க.. முறுக்கு சாம்பார், அதிரசம் ரசம், வடை பொரியல், ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: தீபாவளி ஒரு பக்கம் சம்பள பணத்தை ஸ்வாகா செய்துவிட்டது. மாசக் கடைசியில் வந்து எல்லோரையும் திக்கு முக்காட செய்த நிலையில் அந்த கடனை அடைக்க இந்த மாதம் பலரும் திண்டாடி வருகின்றனர்.

memes
memes

ஆனால் அதைக் கூட சமாளித்து விடலாம் வீட்டில் அம்மா மனைவி செய்யும் அட்ராசிட்டியை தான் சமாளிக்க முடியவில்லை. தீபாவளி வந்து விட்டாலே காலம் காலமாக இந்த ஒரு விஷயம் மட்டும் மாறவே மாறாது.

memes
memes

அதாவது தீபாவளிக்கு செய்த பலகாரம் தீரும் வரை அதுதான் எல்லார் வீட்டிலும் ஸ்னாக்ஸ் லிஸ்டில் இடம் பெறும். வீட்டுக்கு விருந்தாளி வந்தா கூட தட்டில் முறுக்கு அதிரசம் ரவா லட்டு என அடுக்கி வைத்து கொடுத்து விடுவார்கள்.

memes
memes

அது கூட பரவாயில்லை காலையில் ஆரம்பித்தால் இரவு வரை சாப்பாட்டுக்கு சைடிஷ் அதுதான். இதைவிட கொடுமை என்னவென்றால் ஆபீஸ் செல்லும் கணவன்மார்களுக்கும் மனைவிகள் இதையே சைடு டிஷ் ஆக கொடுத்துவிடுகின்றனர்.

memes
memes

இதுதான் இப்படி என்றால் பள்ளி செல்லும் குழந்தைகளின் ஸ்நாக்ஸ் கூட இதுதான். அடங்கப்பா இதுக்கு ஒரு முடிவே இல்லையா என்பது தான் அனைவரின் மைண்ட் வாய்ஸ். ஆனாலும் பலகாரம் தீரும் வரை இந்த வேதனையை அனுபவித்து தான் ஆக வேண்டும்.

memes
memes

அதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். அப்படி இணையத்தை கலக்கும் சில ஜாலியான மீம்ஸ் தொகுப்பு இதோ.

memes
memes

Trending News