Memes: காலம் காலமாக வீட்டில் பெரியவர்கள் சொல்லும் ஒரே அறிவுரை இதுதான். பள்ளிக்கூடம் போகும்போது காலேஜ் போனா ஜாலியா இருக்கும். காலேஜ் படிக்கும் போது வேலைக்கு போனால் ஜாலியா இருக்கும் என சொல்வார்கள்.
ஆனால் இப்போது கல்லூரிக்கு செல்பவர்களையோ இல்லை வேலைக்கு செல்பவர்களையோ கேட்டால் ஸ்கூல் லைப் தான் மறக்க முடியாதது என்று சொல்வார்கள். ஒரு விதத்தில் அது உண்மையும் கூட.
ஏனென்றால் வேலைக்கு வந்து விட்டால் பல சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. காலையில் எழுந்து ஓட ஆரம்பித்தால் இரவு வரை ஓட்டம் நிற்பதில்லை.
சூழ்நிலையின் காரணமாக கிடைத்த வேலையை பார்ப்பவர்கள் ஒரு பக்கம் குறைந்த சம்பளத்தில் அதிகபட்ச நேரம் வேலை பார்ப்பவர்கள் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கின்றனர்.
இது ஒரு புறம் கஷ்டமாக இருந்தாலும் அதையே ஜாலியாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருபவர்களும் உண்டு. வேலைக்கு போனா நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்துடும்னு நெனச்சேன்.
ஆனால் அப்புறம் தான் தெரிஞ்சது கிடைச்ச வேலைய காப்பாத்தறதே கஷ்டம் தான்னு. இப்படி சில ஜாலி மீம்ஸ் வைரலாக வருகிறது. அதன் தொகுப்பு இதோ.