ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மண்ட மேல இருக்க கொண்டையை மறந்த அமலாபால்.. வலிமை, பீஸ்டை தொடர்ந்து சிக்கலில் மாட்டிய காடவர்

சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்களிலேயே முன்னுக்குப் பின் முரணாக சில காட்சிகள் வைக்கப்படுகிறது. அதாவது வலிமை, பீஸ்ட் போன்ற படங்களில் குழந்தைகளே நம்ப முடியாத சில காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதனால் இப்படத்திற்கு கேலி, கிண்டலான கமெண்ட்ஸ் வந்து சேர்ந்தது.

தற்போது அதே போன்ற சிக்கலை சந்தித்து உள்ளது அமலாபாலின் காடவர் படம். அதாவது இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றாலும் சில விஷயங்களில் படக்குழுவினர் கோட்டைவிட்டு உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இப்படத்தின் ஆரம்பம் முதலே பல காட்சிகளில் மண்டை மேலே உள்ள கொண்டையை மறந்துவிட்டார்கள்.

Also Read: ரீ-என்ட்ரியில் விருமனை ஓரம் கட்டிய அமலாபால்.. டாப் ரேட்டிங்கில் முதல் இடத்தைப் பிடித்த தரமான சம்பவம்

இப்படத்தில் பிரேதப் பரிசோதனை நிபுணர் அதாவது போலீஸ் சர்ஜனாக அமலாபால் நடித்து இருந்தார். சாதாரணமாக பிணவறைக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து விட்டு செல்ல வேண்டும். ஆனால் அங்குள்ள இன்ஸ்பெக்டர்கள் பிணவறைக்கு செல்லும்போது சாதாரணமாக செல்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் அமலாபால் அங்கேயே உணவு உண்கிறார். என்னதான் அவருக்கு இறந்த உடல்கள் பழக்கப்பட்டு இருந்தாலும் பிணங்கள் இருக்கும் இடங்களில் சாப்பிடும் காட்சி வித்தியாசமாகத்தான் அமைந்துள்ளது. மேலும் ஒரு போலீஸ் சர்ஜனின் வேலை பிணங்களைப் போஸ்ட் மார்ட்டம் செய்வது, தடவியல் சமந்தமான விஷயங்களை கண்டறிந்து, போலீசுக்கு ஆலோசனை கூறுவது மட்டும்தான்.

Also Read: அமலாபால் மிரட்டும் க்ரைம் திரில்லர்.. கடாவர் விமர்சனம்

ஆனால் போலீசுக்கு இணையாக இவரும் அவர்களுடன் இன்வெஸ்டிகேஷன் செய்யுமளவிற்கு செல்கிறார். அதுமட்டுமல்லாமல் 4 வருடமாக மண்ணில் புதைந்த உடலை வெளியில் எடுக்கிறார்கள். உடல் கெட்டுப் போகாமல் இருக்க மெடிக்கல் சம்பந்தமான சில விஷயங்கள் கூறினாலும் நேற்று புதைத்தது போல் உள்ளது.

இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் படத்தில் சொல்லிக் கொண்டே போகலாம். இவ்வாறு படத்தில் லாஜிக் இல்லை என்றாலும் கதையின் சுவாரஸ்யம் ரசிகர்களை காடவர் படத்தை பார்க்க செய்கிறது. மேலும் இதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இருக்க வாய்ப்புள்ளது.

Also Read: முதல் மனைவியை வெறுத்து ஒதுக்கி 2ம் திருமணம் செய்த ஐந்து பிரபலங்கள்.. இப்பவும் மாறாத அமலாபால்

Trending News