வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

வடிவேலுவை திட்டுறவங்க.! ஏன் அஜித்தை திட்டல? கொளுத்தி போட்டு வேடிக்கை பார்க்கும் மீம் கிரியேட்டர்ஸ்

அஜித் நடித்த முதல் படம் அமராவதி. இந்த படம் பாட்டிற்காகவே மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தில் பாடல்களை பாடியது SPB தான். தென்னிந்தியா திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் இருக்கும் இவர் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர்.

இவர் கர்ணன் போன்ற குணம் கொண்டவர் என்று ஒரு சிலர் சொல்ல, இன்னும் ஒரு சிலர், ஐயோ அவரா? சரியான attitude என்றும் கூறுவார்கள். இது உண்மை இல்லை என்று சொல்லமுடியாது, கோவம் இருக்கும் இடத்தில் தானே குணமும் இருக்கும்.

இந்த நிலையில், ஒரு சில மீம் கிரியேட்டர்ஸ் அஜித்துக்கு எதிராக சில வேலைகளை பார்த்து வருகின்றனர். எப்போதோ நடந்த விஷயத்தை இப்போது விவாதப்பொருளாக மாற்றி வருகின்றனர். அனைவருக்கும் தெரியும், SPB அஜித் படங்களுக்கு பல சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். ஆனால் அவருக்கு, இறுதி அஞ்சலி செலுத்த அஜித் போகவில்லை.

கேப்டன் மறைவுக்கு அஞ்சலி செலுத்த செல்லவில்லை. இந்த நிலையில், வடிவேலுக்காவது பகை இருக்கு, செல்லாமல் இருந்தார்.. இவர் ஏன் செல்லவில்லை.? என்று எப்போதோ நடந்து முடிந்த இறுதி சடங்குக்கு, இன்னும் சகுனம் பார்ப்பது போல கொளுத்தி போட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். இது அந்த நேரத்தில் சர்ச்சையாக மாறியபோது கூட அஜித் ஒரு எட்டு பாக்கவில்லை என்பது தான் உண்மை.

அப்படி இருக்க, இப்போது பட வேலைகள் நடக்கும் நேரத்தில் இதையெல்லாம் அவர் தலையில் ஏற்றிக்கொள்ளமாட்டார். ஆனால், அஜித்துக்கு ரசிகர்களை விட haters ரொம்ப அதிகமோ என்ற கேள்வியை மனதிற்குள் உருவாக்குகிறது. காரணம், அவரது நல்ல செய்திகளை விட கேட்ட செய்தியை வேகமாக ஒரு குழு பரப்பி வருகிறது.

Trending News