அனிருத் இந்த இளவயதிலேயே பல சாதனைகளை புரிந்து வருகிறார். ஆனால் சமீபகாலமாக அவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் வந்த வண்ணமே உள்ளது. அதாவது குறித்த நேரத்தில் படத்தை முடித்து கொடுக்காமல் கடைசி நேரம் வரை அனிருத் இழுத்தடிக்கிறார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஏனென்றால் படத்தை சீக்கிரமாக முடித்துக் கொடுத்தால் இதை மாற்றங்கள், அதை மாற்றங்கள் என்று ஏதாவது தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். இதனால் கடைசி நேரத்தில் முடித்துக் கொடுத்தால் எதுவும் சொல்ல முடியாது என்ற டெக்னிக்கை பயன்படுத்தி வருகிறார் என ஏகப்பட்ட புகார்கள் அனிருத் மீது வந்த வண்ணம் உள்ளது.
இதனால்தான் தற்போது விஜய்யின் 66வது படத்திற்கான வாய்ப்பு தமனுக்கு சென்றதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் அனிருத் தரப்பிலிருந்து அவருடைய வளர்ச்சி பிடிக்காமல்தான் இப்படி புரளியை கிளப்பி விடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த வருடம் தொடக்கத்தில் இருந்த ஜூன் மாதத்திற்குள் கிட்டத்தட்ட 5 படங்களுக்கு மேல் அனிருத் முடித்துக் கொடுத்துள்ளார். விஜய்யின் பீஸ்ட் படத்தில் அனிருத் இசையமைத்த அரபி குத்து மற்றும் ஜாலியா ஜிம்கானா பாடல் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது.
விக்னேஷ் சிவனின் காற்றுவாக்கில் இரண்டு காதல் படத்தின் ரிலீசுக்கு முன்பே அனிருத் இசையமைத்த பாடல் பட்டையைக் கிளப்பியது. இதைதொடர்ந்து சிவகார்த்திகேயனின் டான், கமலஹாசனின் விக்ரம் மற்றும் ஜெர்சி என கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் 5 படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இன்னும் இரு மாதங்களில் வெளியாகயிருக்கும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இவ்வாறு மின்னல் வேகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் அனிருத்தின் பெயரைக் கெடுப்பதற்காக சில பேர் அவரை இவ்வாறு தப்பாக பேசி வருகின்றனர்.