வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அஜித் கூட போட்டோ எடுத்தா வேலை போயிடுமா.? இதுக்கு ஒரு முடிவே இல்லையா ஏகே

Ajith: யார் வம்பு தும்புக்கும் போகாமல் தான் உண்டு தன் வேலை என்று பார்க்கக் கூடியவர் தான் அஜித். ஆனாலும் இவரை சுற்றி சில சர்ச்சைகள் கிளம்பி வருகிறது. பொதுவாக இவரை எந்த பொது நிகழ்ச்சியிலும், பிரமோஷன்களிலும் பார்க்கவே முடியாது. அந்த வகையில் அவ்வப்போது இவர் ஏதாவது ஒரு விதத்தில் ரசிகர்களிடம் எடுத்துக்கொண்ட புகைப்படம் மட்டும் வெளிவரும்.

அப்படித்தான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மருத்துவமனையில் அஜித்துடன் சேர்ந்து ஒரு நர்ஸ் சேர்ந்து எடுத்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் ஒரு சர்ச்சை கிளம்பிய நிலையில் மருத்துவமனையில் இருந்து அந்தப் பெண் ஊழியரை பணி நீக்கம் செய்து விட்டார்கள். அடுத்து தன்னுடைய வேலை பறிபோனதால் அஜித் வீட்டிற்கு முன் அந்தப் பெண் ஏகப்பட்ட ரகளையை பண்ணி வந்தார்.

இதனை எடுத்து தற்போதும் இதே மாதிரி ஒரு பிரச்சனை கிளம்பி இருக்கிறது. அதாவது விடாமுயற்சி படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வந்து கொண்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்தை விடாமுயற்சி படத்தில் பணி புரிந்த ஒருவர் அஜித்திடம் கெஞ்சி கேட்டு அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்திருக்கிறார்.

Also read:  எந்த கொடியும் இல்ல ஸ்டிக்கரும் இல்ல.. கோடியில் வாரி வழங்கிய அஜித், பார்த்து கத்துக்கங்க தளபதி

அஜித்தும் வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் ரசிகரின் விருப்பத்திற்கு ஏற்ப ஓகே சொல்லி போட்டோவையும் எடுத்து விட்டார். ஆனால் இந்த புகைப்படம் மிகவும் ட்ரெண்டிங் ஆனதால் விடாமுயற்சியின் படத்தின் சீக்ரெட்டுகள் லீக் ஆகிவிட்டது. இதை தெரிந்து கொண்ட இயக்குனர் ரொம்பவே அப்செட்டில் இருந்திருக்கிறார். அதன் பின் அஜித் அந்த நபரை கூப்பிட்டு கேட்டிருக்கிறார்.

அதற்கு அவர் இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் நினைச்சு கூட பார்க்கவில்லை. நான் தெரியாத்தனமாக என்னுடைய டிபி-யில் வச்சு விட்டேன் என்று கூறி இருக்கிறார். உடனே இவரின் நிலைமையை தெரிந்து கொண்டு அஜித்தும் ஓகே பரவாயில்லை என்று சொல்லிவிட்டார். ஆனால் அடுத்த கொஞ்ச நாளிலே அந்த நபரை வேலை விட்டு தூக்கி விட்டனர்.

அடுத்து மொத்தமாக அவரை பேக் பண்ணி தமிழ்நாட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். ஆக மொத்தத்தில் அஜித்துடன் சேர்ந்து எடுத்த ஒரு புகைப்படத்தால் அவருடைய வேலை பறிபோய் விட்டது. அஜித் பரவாயில்லை இது தெரியாமல் நடந்த விஷயம் விட்டு விடுங்கள் என்று சொல்லியும், அந்த நபரை வேலை விட்டு தூக்கி விட்டார்கள். இது யார் மீது தப்பு என்று தெரியவில்லை. ஆனால் கடைசியில் பாதிக்கப்பட்டு நிற்பது அந்த ஊழியர் தான்.

Also read: பிட்டு பிட்டாக காப்பி அடித்த மகிழ் திருமேனி.. டபுள் ஓகே சொன்ன அஜித், இந்த ஹாலிவுட் படம்தான் விடாமுயற்சியா.?

Trending News