செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இதுவரை ரஜினி செய்யாத காரியம்.. சூப்பர் ஸ்டாரான பிறகு முதன்முதலாக சென்னையில் நடக்கும் அதிசயம்

ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் இதுவரை நடக்காத ஒரு அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. அதாவது ரஜினி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துக்கு வந்த பிறகு சென்னையில் அவுட்டோர் சூட்டிங் நடந்தது கிடையாது. ஏனென்றால் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கும் ரஜினியை காண ரசிகர்கள் கூடிவிட்டால் படப்பிடிப்பில் பிரச்சனைகள் நேரிடும் என்பதால் அதை தவிர்த்து வந்தனர்.

Also read:தேவையில்லாமல் சிபிசக்கரவர்த்தி படத்தில் கழுத்தறுக்கும் ரஜினி.. ஆணி புடுங்குறதுல ஒரு நியாயம் வேண்டாமா தலைவரே!

அதனாலேயே ரஜினியின் பட சூட்டிங் அவுட்டோரில் நடத்தாமல் இன்டோரில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. அந்த வகையில் சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் அவருடைய பட சூட்டிங் இருக்கும். ஆனால் அந்த சரித்திரத்தை தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் நெல்சன் மாற்றி அமைத்திருக்கிறார்.

அதாவது தற்போது ரஜினி பங்கேற்கும் ஜெயிலர் பட சூட்டிங் சென்னையை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் பாண்டிச்சேரியின் கடலோரப் பகுதிகளிலும் இதன் சூட்டிங் நடத்தப்பட இருக்கிறது. முதல் முறையாக சூப்பர் ஸ்டாரின் படப்பிடிப்பு அவுட்டோரில் நடத்தப்படுவது ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.

Also read:அஜித்தை கூப்பிட்டு ரஜினி சொன்ன அறிவுரை.. தப்பை சரிசெய்து இன்றுவரை அதே கோட்டில் நிற்கும் அஜித்

மேலும் கடலூர் மாவட்டம் அருகே இருக்கும் நத்தம் பகுதியில் தற்போது சூட்டிங் நடைபெற இருக்கிறது. அதில் பங்கேற்க சூப்பர் ஸ்டார் அங்கு வருகை புரிந்துள்ளார். இதை கேள்விப்பட்ட அவருடைய ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்களாம். மேலும் ரஜினிக்கு சிறப்பான வரவேற்பும் கிடைத்திருக்கிறது.

தன்னை காண வந்த ரசிகர்களை பார்த்து ரஜினி காரில் இருந்தபடியே கையசைக்கும் போட்டோக்களும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது. தற்போது படு ஸ்பீடாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த படத்தை நெல்சன் வெகு விரைவில் முடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறாராம்.

Also read:ரஜினிகாந்தின் மகளுக்கு நாற்காலி கொடுக்காத பிரபல இயக்குனர்.. கொதித்தெழுந்த ரஜினிகாந்த்.!

Trending News