வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

பாக்கியா-வின் அலட்சியத்தால் பலிகடாக சிக்கும் மகன்.. சைக்கோ மூஞ்சியில் கறியை பூச போகும் மருமகள்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், தற்போது பாக்கியா நெனச்சபடி சொந்தக்காலில் நின்னு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி விட்டார். இதை அடுத்து ஒரு ரெஸ்டாரண்டுக்கு ஓனராக போகிறார். இப்படி இவருடைய கேரியர் டாப் கியரில் போக ஆரம்பித்து விட்டது. ஆனால் பாக்யாவின் இரண்டு மகன்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கிறது.

இதில் மூத்த மகன் செழியனுக்கு ஜெனி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி ஒரு இடியை தூக்கி போட்டு இருக்கிறார். இவருடைய வாழ்க்கையை எப்படி சரி செய்வது என்று மொத்த குடும்பமும் அல்லோல பட்டு வருகிறது. இதற்கு அடுத்து தற்போது எழில் வாழ்க்கையிலும் ஒரு பூகம்பம் வெடிக்கப் போகிறது.

அதாவது அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் உயிரோடு வந்ததும், பாக்யாவியை சந்தித்து குடும்பத்தில் இருப்பவர்களிடம் உண்மையை சொல்லுமாறு ஒரு மாத கால அவகாசம் கொடுத்திருந்தார். ஆனால் பாக்கியாவின் அலட்சியத்தால் கணேசன் பற்றி உண்மையை யாரிடமும் சொல்ல முடியாமல் போய்விட்டது.

Also read: கதிர், குணசேகரன் சேர்ந்து போடும் டிராமா.. இது அத்தனையும் நடிப்பா கோபாலு, ஏமாந்துட்டியே நந்தினி

இதனால் இனியும் பாக்யாவை நம்பினால் வேஸ்ட் என்று கணேசன், அமிர்தாவை பார்த்து உண்மையை சொல்வதற்கு வீட்டுக்கு வருகிறார். இந்த விஷயம் தெரிந்ததும் அவசர அவசரமாக பாக்யா, எழில் அமிர்தா மற்றும் நிலா பாப்பாவை சேர்த்து கோவிலுக்கு அனுப்பி வைக்கிறார். தற்போது இந்த உண்மையை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி ஆக வேண்டும் என்ற காரணத்தினால் அனைவரையும் கூப்பிடுகிறார்.

அதன்படி அனைவரும் வட்டமேசை மாநாடு போட்டு பாக்யாவிடம் என்ன விஷயம் என்று கேட்கிறார்கள். அப்பொழுது பாக்யா, அமிர்தாவின் முன்னாள் கணவர் உயிரோடு தான் இருக்கிறார். அவர் அடிக்கடி வந்து அமிர்தாவை என்னிடம் அனுப்பி வையுங்கள் என்று கேட்டார். நான் இதற்கு ஒரு முடிவு சொல்கிறேன் என்று டைம் கேட்டிருந்தேன். ஆனால் அவர் இப்பொழுது அமிர்தாவை பார்ப்பதற்கு வீட்டிற்கு வருகிறார் என்று எல்லா உண்மையும் குடும்பத்தில் இருப்பவர்களிடம் பாக்யா போட்டு உடைக்கிறார்.

உடனே கோபி, கணேசனின் உருவத்தை பற்றி சொல்லி அன்றைக்கு வீட்டிற்கு வந்தாரே, அவரா என்று கேட்கிறார். பாக்யாவும் ஆமா அவர்தான் என்று சொன்னதும் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார்கள். ஆனாலும் கடைசியில் அமிர்தாவிற்கு இந்த உண்மை தெரிந்தாலும் கணேசன் மூஞ்சியில் கரியை பூசும் விதமாக எழிலுடன் தான் வாழ போகிறார். ஆக மொத்தத்தில் இந்த ஒரு கேரக்டர் தேவையில்லாத ஆணியாக தான் இத்தனை நாள் காட்டி வந்தார்கள்.

Also read: பணக்கார மருமகளுக்கு சேவகம் பார்க்கும் விஜயா.. வேலைக்காரியாக மாறிய மீனா, ரோகிணி எடுத்த முடிவு

Trending News