தெலுங்கு சினிமாவின் முன்னாள் சூப்பர்ஸ்டார் மோகன் பாபு. இவர் தன் மகன் – மருமகள் மீது போலீஸில் புகார் அளித்துள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர் மோகன் பாபு. இவர் தன் மகனும், மருமகளும் அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் தனக்குப் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
போலீஸில் புகாரளித்த மோகன் பாபு
போலீஸில் அவர் அளித்த புகாரில், என் மகன் மஞ்சு மனோஜ், மருமகள் மோனிகா இருவரும், சிலருடன் சேர்ந்து, ஞாயிற்றுக்கிழமை ரக்காரெட்டி மாவட்டம், ஐதராபாத் அருகில் உள்ள ஜல்பல்லியில் என் வீட்டுக்கு வந்து தொல்லை செய்தனர்.
இதில், எனக்கும் என் சொத்துக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நான் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த போது , மீண்டும் வீடு திரும்பக் காத்திருந்தனர். இதை அறிந்து நான் பயந்துபோனேன். என் விட்டை அபகரிக்க நினைக்கிறார்கள். இது எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனால், மனோஜ், மருமகள் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என் சொத்துக்களில் இருந்து அவர்களி வெளியேற்ற வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளார்.
சொத்துக்காக இருவருக்கும் இடையே தகராறு?
இதற்குமுன் தன் தந்தை மோகன் பாபு தன்னை தாக்கியதாகக் கூறி, போலிஸில் புகார் அளித்த நிலையில், மோகன் பாபு அவருக்கு எதிராகப் புகார் அளித்துள்ளார். மோகன் பாபு – மனோஜ் இருவருக்கும் இடையே சொத்து தகராறு நீண்ட நாட்களாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.