புதன்கிழமை, ஜனவரி 22, 2025

குட்டிப் பகை ஆடு உறவா.? குடும்ப சண்டை, ரஜினியை விட்டுக் கொடுக்காத மருமகன்.. உச்சி குளிர்ந்து போன சூப்பர் ஸ்டார்

Actor Rajini: ஆடு பகை குட்டி உறவா என்ற பழமொழியை நாம் கேட்டிருப்போம். ஆனால் இங்கு குட்டி பகை, ஆடு உறவு என்ற கதை தான் நடந்து கொண்டிருக்கிறது. அண்மைக்காலமாகவே சூப்பர் ஸ்டார் வீட்டு பிரச்சனை தான் மீடியாவில் பலவிதமாக பேசப்பட்டு வருகிறது.

அதிலும் தனுஷ், ஐஸ்வர்யா தங்களுடைய விவாகரத்து முடிவை வெளியிட்டதிலிருந்து பல யூகங்கள் கிளம்பி கொண்டிருக்கிறது. ஆனாலும் தனுஷ் எப்பவுமே நான் தலைவரின் ரசிகன் தான் என்பதை பலமுறை நிரூபித்திருக்கிறார். அப்படித்தான் தற்போது ஜெயிலர் பற்றியும் அவர் ஒரு ட்வீட் போட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

Also read: மொத்த படக்குழுவையும் முதலாளி ஆக்கி அழகு பார்த்த ரஜினி.. பாண்டியன் படத்தில் நடந்த சுவாரஸ்யம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள இப்படம் வரும் 10-ம் தேதி ரசிகர்களின் பார்வைக்கு வர இருக்கிறது. இதற்காகவே பல மாதங்களாக காத்திருக்கும் ரசிகர்கள் இப்போது படத்தை திருவிழா போல் கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த சூழலில் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது ஜெயிலர் வாரம் என்று சிரிக்கும் எமோஜி பொம்மைகளை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்னதான் குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் ரஜினியின் ரசிகன் என்பதை தனுஷ் நிரூபித்து விட்டதாக புகழ்ந்து வருகின்றனர்.

Also read: ரஜினியை பிடிக்காதவர்கள் செய்யும் நச்சு வேலை.. தளபதியை வைத்து ஆடும் ஆடுபுலி ஆட்டம்

உண்மையில் தனுஷின் சமீப கால நடவடிக்கைகள் அனைத்தும் ரஜினியை போன்றே இருப்பதாக பலரும் பேசி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அவருடைய பேச்சு, நடவடிக்கை கூட ரொம்பவும் பக்குவமாகவும், மனமுதிர்ச்சியாகவும் இருப்பதை பல மேடைகளில் நாம் பார்த்திருக்கிறோம்.

dhanush-tweet
dhanush-tweet

அந்த வகையில் தனுஷ் தற்போது ஜெயிலர் படத்தை பற்றி போட்டிருக்கும் இந்த பதிவு கூட அவருடைய முதிர்ச்சியை வெளிப்படையாக காட்டுகிறது. இது சூப்பர் ஸ்டாரையும் உச்சி குளிர வைத்திருக்கும். அந்த வகையில் முன்னாள் மாமனாரை விட்டுக் கொடுக்காத தனுஷ் ஜெயிலர் படத்தையும் முதல் நாளிலேயே பார்த்துவிடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also read: வயித்தெரிச்சலில் கரையும் காக்கா, ஜெயிலருக்கு எதிராக நடக்கும் சதி.. கொடுத்த காசுக்கு மேல கூவும் ப்ளூ சட்டை

Trending News