வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

30 வருடம் கழித்து அப்பாவின் சூப்பர் ஹிட் பட 2-ம் பாகத்தை எடுக்கும் ராஜ்கிரனின் மகன்.. எதிர்பார்ப்பில் கோலிவுட்!

தமிழ் சினிமாவில் 1991ல் கஸ்தூரிராஜா இயக்கத்தில், ‘என் ராசாவின் மனசிலே’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் ராஜ்கிரண். இவருக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். மேலும் இந்தப்படத்தை ராஜ்கிரண் தனது ரெட் சன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்து, சூப்பர் ஹிட் அடித்தார்.

இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை நடிகர் ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. ஏனென்றால் இன்று 20 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் முஹம்மது கொண்டாடுகிறார்.

ஆகையால் இன்றைய தினத்தில் ராஜ்கிரண் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது, ‘இறையருளால் இன்று என் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது அவர்களின் 20-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

என் ராசாவின் மனசிலே படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கிறார். எனவே அவரே இந்தப் படத்தை இயக்கவும் உள்ளார்.

rajkiran-cinemapettai

ஆகையால் தமிழ் சினிமாவில் என்னை தூக்கிவிட்ட இந்த படம், எனது மகனையும் வெற்றி இயக்குனராக மாற்றும் என்று நம்புகிறேன். அதற்கு உங்களுடைய பிரார்த்தனைகளையும் வாழ்த்துக்களையும் வேண்டுகிறேன்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ராஜ்கிரணின் மகன் கோலிவுட்டில் என் ராசாவின் மனசிலே இரண்டாம் பாகத்தை இயக்குவதன் மூலம் அறிமுகமாக உள்ளதால், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் கோலிவுட் வட்டாரத்தில் அதிகமாக காணப்படுகிறது.

Trending News