தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை கையாண்டு அதில் வெற்றி பெற்றவர்தான் விக்ரம். சேது படத்தின் வெற்றிக்குப் பிறகு சியான் விக்ரம் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். ஆரம்ப காலங்களில் விக்ரம் டப்பிங் ஆர்டிஸ்டாக பணிபுரிந்தார். பிரபுதேவா, கமலஹாசன் என பல முன்னணி நடிகர்களுக்கு குரல் கொடுத்துள்ளார். நடிகர், தயாரிப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட், பின்னணிபாடகர் என பல துறைகளில் கால் பதித்தவர் சியான் விக்ரம்.
ஸ்ரீ: சூர்யா, ஸ்ருதிகா, காயத்ரி ஜெயராம் நடித்து 2002 இல் வெளியான திரைப்படம் ஸ்ரீ. இப்படத்துக்கு டி எஸ் முரளிதரன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் “யாமிருக்க பயமேன்” என்ற பாடலை சங்கர் மகாதேவன், திப்பு ஆகியோருடன் விக்ரம் சேர்ந்து பாடி இருந்தார்.
ஜெமினி: சரண் இயக்கத்தில் விக்ரம், கிரன், மனோரம்மா, கலாபவன் மணி பலர் நடித்து வெளியான திரைப்படம் ஜெமினி. இப்படத்தில் பரத்வாஜ் இசையில் விக்ரம், அனுராதா ஸ்ரீராம் இணைந்து “ஓ போடு” என்ற பாடலைப் பாடினார்கள். இப்பாடல் மிகப்பெரிய ஹிட் பாடலாக அமைந்தது.
கந்தசாமி: சுசி கணேசன் இயக்கத்தில் விக்ரம், ஸ்ரேயா, பிரபு, வடிவேலு என பல படங்களில் நடித்து வெளியான திரைப்படம் கந்தசாமி. இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் “எஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி” , “இதெல்லாம் டூப்பு” , “மேம் போ மாமியா” , ” மியாவ் மியாவ் பூனை” என்று நான்கு பாடல்களை விக்ரம் பாடியுள்ளார்.
மதராசபட்டினம்: ஏ எல் விஜய் இயக்கத்தில் ஆர்யா, எமி ஜாக்சன், நாசர், எம்எஸ் பாஸ்கர் என பலர் நடித்து 2010ல் வெளியான திரைப்படம் மதராசபட்டினம். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் உள்ள “மேகமே ஓ மேகமே” என்ற பாடலை மா சு விஸ்வநாதன், நாசர் உடன் சேர்ந்து விக்ரம் இப்பாடலைப் பாடியிருந்தார்.
தெய்வத் திருமகள்: ஏ எல் விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, அமலா பால், நாசர் நடித்து 2011இல் வெளியான திரைப்படம் தெய்வத்திருமகள். இப்படத்தில் விக்ரம் மனவளர்ச்சி குன்றியவராக நடித்திருந்தார். இப்படத்தின் ஜீ வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் “கதை சொல்லப் போறேன்” , ” பா பா பாப்பா ” என்ற பாடலை விக்ரம் பாடியிருந்தார்.
ராஜபாட்டை: சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம், தீக்ஷா சேத், கே விஸ்வநாத் எல்லாம் பலர் நடித்திருந்த வெளியான படம் ராஜபாட்டை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் “லட்டு லட்டு” என்ற பாடலை விக்ரம் பாடியிருந்தார்.
டேவிட்: பெஜாய் நம்பியார் இயக்கத்தில் விக்ரம், ஜீவா, நாசர் நடித்த வெளியான திரைப்படம் டேவிட். இப்படத்திற்கு ரெமோ பெர்னாண்டஸ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் “மரிய பிதாசே” பாடலை ரெமோ பெர்னாண்டஸ் உடன் இணைந்து விக்ரம் பாடியிருந்தார்.
கடாரம் கொண்டான்: கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாகவும், அக்சரா ஹாசன் மற்றும் அபிஹசன் ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் விக்ரம் “தீச்சுடர் குனியுமா” என்ற பாடலை பாடியிருந்தார்.