தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சோனியா அகர்வால். இவர் தனுஷின் காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் பாராட்டை பெற்றார். அதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற அனைத்து திரைப்படங்களும் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
அதன் பிறகு இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டு நடிப்பிலிருந்து பிரேக் எடுத்தார். ஆனால் குறிப்பிட்ட காலத்திலேயே இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். பிறகு ஒரு சில திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்த சோனியா அகர்வால் சின்னத் திரையிலும் சில சீரியல்களில் நடித்துள்ளார்.
சில காலமாக சோனியா அகர்வாலை பற்றி எந்த தகவலும் இல்லாமல் இருந்த ரசிகர்களுக்கு தற்போது ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது நடிகை சோனியா அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கிரான்மா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தை இயக்குனர் எஸ் எஸ் ஷிஜின் லால் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை விமலா ராமன், சோனியா அகர்வாலுடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படம் ஹாலிவுட் தரத்தில் உருவாகும் திகில் திரைப்படமாகும். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது அதில் சோனியா அகர்வால் கையில் கத்தியுடன் ரத்தக் களரியாக நிற்கிறார். மிரட்டலாக வெளியாகியிருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
தற்போது ஹீரோயின்கள் அனைவரும் சோலோ ஹீரோயினாக நடிப்பதையே விரும்புகின்றனர். ஹீரோக்களுடன் டூயட் பாடலுக்கு மட்டும் வந்து செல்லும் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகைகள் விரும்புவதில்லை. நடிகை நயன்தாரா முதன் முதலில் சோலோ ஹீரோயினாக நடித்து ரசிகர்களிடையே பாராட்டை பெற்றார். இந்த வகையில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை த்ரிஷாவும் சோலோ ஹீரோயினாக சில படங்களில் நடித்தார்.
நாயகி, மோகினி போன்ற திகில் திரைப்படங்களில் திரிஷா சோலோ ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனால் அவரால் நயன்தாரா அளவிற்கு ரசிகர்களை கவர முடியவில்லை. அதனால் த்ரிஷா சில காலங்கள் திரையுலகை விட்டு ஒதுங்கும் நிலைக்கு சென்றார்.
தற்போது நடிகை சோனியா அகர்வாலும், த்ரிஷாவை பார்த்து சோலோ ஹீரோயினாக கிரான்மா திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவர் நயன்தாரா அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடிப்பாரா அல்லது த்ரிஷாவை போல் காணாமல் போவரா என்று படத்தைப் பார்த்தால் தெரிந்துவிடும்.
![grandma-sonia-aggarwal](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/11/sonia-agarwal-grandma.png)