திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

செல்வராகவனுக்கு சவால் விட்ட நடிகை.. விவாகரத்துக்குப் பின் வெளிப்படையாக பேசிய சோனியா அகர்வால்

கடந்த 2003ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால், இவர் மற்ற நடிகைகளை காட்டிலும் தன்னுடைய நிதானமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான விருதை தட்டிச் சென்றார். அதன் பிறகு தொடர்ந்து சோனியா அகர்வால், செல்வராகவன் இயக்கத்தில் அவருடைய தம்பி தனுஷுடன் சேர்ந்து ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

இவ்வாறு தொடர்ந்து செல்வராகவனுடன் இணைந்திருந்த சோனியா அகர்வாலுக்கும் செல்வராகவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன்பிறகு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்து, மிகக்குறுகிய காலத்திலேயே இவர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். விவாகரத்துப் பெற்ற பின் இருவரும் அவரவர் பாதையில் தனித்தனியாக சென்று கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக செல்வராகவன் அடுத்தடுத்த படங்களில் மும்முரம் காட்ட, சோனியா அகர்வாலுக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் பின் அவர் நடிப்பில் ஆர்வம் காட்டவில்லை. பின்பு செல்வராகவன் அஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

ஆனால் சோனியா அகர்வால் சீரியல்களிலும் சினிமாவில் துண்டு துக்கடா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இப்பொழுது ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார் சோனியா. ‘அதை விட்டாலும் கதியில்லை, அப்பால போனாலும் விதி இல்லை’ என்பதை மனதில் வைத்துக்கொண்டு சோனியா, இனி கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து, சீனியர் ஆர்டிஸ்ட் ஆக வலம்வர படங்களை தேர்ந்தெடுத்து கொண்டிருக்கிறார்.

இப்பொழுது அவர் வெளிப்படையாக பல சவால்களை விட்டு வருகிறார். ‘தனுஷுடன் நடிக்க தயார் அவங்க அண்ணன் செல்வராகவனும் நடிக்க தயார். வெற்றிப்படங்களில் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது அவருடைய கடின உழைப்பு என்னை மிகவும் கவர்ந்தது.

நாங்கள் இன்னும் பேசிக்கொண்டு நல்ல நண்பர்களாகத்தான் இருக்கிறோம். எங்களுக்குள் இடையே எந்தவித சண்டை சச்சரவும் இல்லை. அதனால் எனக்கு பிடித்த படம் என்றால் நிச்சயம் தனுஷ், செல்வராகவனுடைய படங்களில் நடிக்க தயார்’ என்று வெளிப்படையாக சோனியா அகர்வால் கூறுகிறார்.

Trending News