Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. நேற்று ஆனந்தி இவ்வளவு நாள் தன்னுடைய வீட்டில் தான் தங்கி இருந்தால் என்ற உண்மையை தெரிந்து கொண்ட அன்புவின் அம்மா கோபத்தின் உச்சகட்டத்திற்கே சென்றுவிட்டார்.
ஆனந்தியை தலை முடியை பிடித்து இழுத்து தரதரவென்று வீட்டு வாசலுக்கு கொண்டு வந்து விட்டார். அதே நேரத்தில் ஹாஸ்டலில் இருந்து காயத்ரி மற்றும் வார்டன் ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். காயத்ரி அன்புவின் அம்மாவிடம் என்னை காப்பாற்ற தான் ஆனந்தி இப்படி எல்லாம் செய்தால், மத்தபடி இவங்களுக்குள் வேறு எந்த விஷயமும் கிடையாது.
ஆனந்திய தப்பா பேசாதீங்க என்று சொல்கிறாள். ஆனால் அன்புவின் அம்மா எந்த விஷயத்தையும் காது கொடுத்து கேட்பதாய் இல்லை. வார்டனும் ஆனந்தியை ஹாஸ்டலுக்கு கூட்டிக்கொண்டு வருகிறார். அங்கே மித்ரா மற்றும் அவளுடைய தோழிகள் ஆனந்தியின் அப்பா ஆனந்தியை கோபத்தில் அடிக்கப் போகிறார் என பெரிய அளவில் எதிர்பார்க்கிறார்கள்.
மொத்த நம்பிக்கையும் உடையும் தருணம்
மோசமான கும்பலிடம் சிக்கி ஏன் பெண்களை ஒரு பெண் காப்பாற்றிய செய்தியை நான் பேப்பரில் படித்தேன். ஆனால் அந்தப் பெண் நீதான் என்று நினைக்கும் போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு என்று ஆனந்தியை பார்த்து சொல்கிறார்.
இந்த விஷயத்தில் மித்ராவுக்கு பெரிய ஏமாற்றம் ஏற்படுகிறது. அதே நேரம் வார்டன் மித்ரா மற்றும் அவளுடைய தோழிகளிடம் எப்போதுமே அடுத்தவங்கள அசிங்கப்படுத்தனும்னு நினைக்காதீங்க. நீங்க அதைவிட பெரிய அளவில அசிங்கப்படுவீங்க என எச்சரித்து விட்டு வெளியே கிளம்புகிறார்.
அன்பு அவனுடைய அம்மாவிடம் ரொம்பவே கோபப்படுகிறான். உடனே அன்புவின் அம்மா அவளை மட்டும் இல்ல உன்னையும் கழுத்த புடிச்சு வெளியே தள்ளி இருக்கணும். சும்மா விட்டேன் என்று சந்தோஷப்பட்டுக்கோ, அவ பொறுக்கி வேலை செஞ்சுட்டு ஹாஸ்டல் இருந்து வெளியே வருவா, அவளுக்கு நீ இடம் கொடுப்பியா என ரொம்ப தரம் தாழ்ந்த வார்த்தைகளை பேசுகிறார்.
இது அன்புக்கு ரொம்ப கோபம் வர வீட்டை விட்டு பையை எடுத்துக் கொண்டு கிளம்புகிறான். அன்பு வீட்டை விட்டு கிளம்புவது போல் நேற்றைய எபிசோடு முடிந்திருக்கிறது. இன்று தான் அவனுடைய அம்மா அதற்கு என்ன ரியாக்ஷன் கொடுக்கிறார் என்பது தெரியும்.
இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தியின் அப்பா எனக்கு உன் மேல ரொம்ப நம்பிக்கை இருக்குது, யார் உன்னை பற்றி என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை என்று சொல்கிறார். ஹாஸ்டலில் தோழிகளிடம் ஆனந்தி அன்பு என்னால ரொம்ப கஷ்டப்படுறாரு, அவர்கிட்ட பேசணும் போல இருக்கு என்று சொல்கிறாள்.
அவள் சொல்லி முடித்ததற்குள்ளேயே அன்பு ஹாஸ்டல் வாசலில் நின்று ஆனந்திக்கு குரல் கொடுக்கிறான். ஆனந்தியும் ரொம்ப சந்தோஷத்துடன் ஓடி வந்த அன்பு விடம் பேசுகிறாள். இதை மித்ரா மாடியில் இருந்து பார்ப்பது போல் இந்த வீடியோ இருக்கிறது.
ஏற்கனவே ஆதாரம் இல்லாமலேயே அன்புதான் அழகன் என்பதை மகேஷை நம்ப வைத்தவள் மித்ரா. இதில் இவர்கள் இருவரும் காதலிக்கும் செய்தி எல்லாம் மித்ராவுக்கு தெரிந்தால் அல்வா சாப்பிட்டது போல் இருக்கும். ஒரு பக்கம் ஆனந்தி மேல் அவளுடைய அப்பா ரொம்ப நம்பிக்கை வைத்திருக்கிறார்.
ஒருவேளை ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் செய்தி தெரிய வந்தால் ஆனந்தி குடும்பமே உடைந்து போய்விடும். இன்னொரு பக்கம் மகேஷ் அன்பு வை ரொம்ப நம்புகிறான். மித்ரா மட்டும் இவர்கள் இருவரும் காதலிப்பதை உறுதி செய்து மகேஷிடம் சொன்னால் அந்த நம்பிக்கையும் மொத்தமாய் தகர்ந்து விடும். இதை இவர்கள் எப்படி கடந்து வருகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.