கடந்த சில வருடங்களாகவே பெரிய அளவு வெற்றி கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்த சூர்யாவுக்கு மிகப் பெரிய பலனை தேடிக் கொடுத்துள்ளது சூரரைப்போற்று திரைப்படம். அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் இந்திய அளவில் OTT தளங்களில் நேரடியாக வெளியான படங்களில் அதிக பார்வையாளர்களை பெற்ற லிஸ்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது சூரரை போற்று. இதுவே படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் அதைவிட பெரிய மரியாதை சூரரைப்போற்று படத்திற்கு கிடைத்துள்ளது. உலகமே போற்றும் ஆஸ்கார் விருது நிகழ்ச்சிக்கு சூரரைப்போற்று படம் தேர்வாகி உள்ளதாம். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
சூர்யாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டாலும் சூரரைப்போற்று படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது ஜிவி பிரகாஷின் பின்னணி இசை என்பதையும் மறந்துவிடக் கூடாது. அதற்கும் பலன் கிடைத்துள்ளது. மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது.
தற்போது சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த இசை அமைப்பாளர் ஆகிய பிரிவுகளில் போட்டி போட உள்ளதாம். அதுமட்டுமில்லாமல் மேலும் சில பிரிவுகளிலும் சூரரைப்போற்று படம் போட்டியிட்டுள்ளது.
இதனால் சூரரைப்போற்று படக்குழு சந்தோசத்தில் தலைகால் புரியாமல் இருக்கிறார்களாம். சூரரை போற்று திரைப்படம் கேப்டன் ஜி ஆர் கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.