சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் சூரரைப் போற்று. தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த வருடம் வெளியான திரைப்படங்களிலேயே ஓடிடி தளங்களில் அதிக பார்வையாளர்களை பெற்ற திரைப்படங்கள் லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தைப் பெற்றது சூரரைப் போற்று. மேலும் இந்த படத்தில் நடித்த சூர்யா, அபர்ணா பாலமுரளி போன்றோரின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் அமேசான் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபத்தை ஈட்டிக் கொடுத்த திரைப்படங்களில் சூரரைப் போற்று படத்திற்கு மிகப்பெரிய பங்கு உண்டு. தற்போது அதையெல்லாம் மீறி ஆஸ்கார் விருதுக்கு இந்திய சினிமா சார்பில் சூரரைப் போற்று படத்தை அனுப்பி உள்ளனர்.
சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த இயக்குனர் போன்ற பிரிவுகளில் இடம்பெற்ற சூரரைப்போற்று திரைப்படம் முதல் ரவுண்டிலேயே வெளியேறி விட்டதாம். இதனால் சூர்யா ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.
மேலும் இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட மற்றொரு மலையாள படமான ஜல்லிக்கட்டு திரைப்படமும் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் வெளியான ஜல்லிக்கட்டு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
இருந்தாலும் ஆஸ்கார் விருது ரேஞ்சுக்கு பேசப்பட்ட தமிழ் படங்களில் சூரரைப் போற்று படத்திற்கு முக்கிய இடம் உண்டு என்பதை நினைத்து ரசிகர்கள் மனதை தேற்றிக் கொள்கிறார்களாம். இருந்தாலும் ஒரு அவார்டு கொடுத்திருக்கலாம்.