வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இறுதிக் கட்டத்தை எட்டிய விடுதலை.. சூரியின் மாஸ் என்ட்ரி

அசுரனின் வெறித்தனமான வெற்றியைத் தொடர்ந்து சூரியை ஹீரோவாக வைத்து வெற்றிமாறன் இயக்கி வரும் படம் தான் விடுதலை. இப்படத்தை வெற்றிமாறன் மற்றும் எல்ரெட் குமார் இணைந்து தயாரிக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்து உள்ளார். மேலும், விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சத்தியமங்கலம் காடுகளில் படமாக்கப்பட்டுள்ள நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தற்போது செங்கல்பட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இத்துடன் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவு பெறுகிறது. இதனை தொடர்ந்து இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தவுள்ளது.

விடுதலை படத்தை முடித்துவிட்டு, சூர்யா நடிப்பில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தில் வெற்றிமாறன் கவனம் செலுத்த உள்ளார். இதுவரை காமெடி நடிகராக மட்டுமே நடித்து வந்த சூரி இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். எனவே ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

viduthalai-vetrimaran-firstlook-poster
viduthalai-vetrimaran-firstlook-poster

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் ஹீரோவாக அவதாரம் எடுப்பது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் சூரிக்கு விடுதலை படம் ஒரு தொடக்கமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News