வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நடிக்க வாய்ப்பு கேட்டு சென்ற சினிமா கம்பெனி.. அவமானத்திற்கு பதிலடி கொடுத்த சூரி

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான சூரி, இந்த படத்திற்கு முன்பே நிறைய படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இந்தப் படத்தில் தான் அவர் பரவலாக அறியப்பட்டார். இவ்வாறு படிப்படியாக முன்னேறிய சூரி, இவ்வளவு நாள் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருந்தார்.

இப்போது முதல் முதலாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு போலீஸ் கெட்டப்பில் டாப் ஹீரோக்களுக்கு எல்லாம் பயங்கர டஃப் கொடுக்கும் அளவுக்கு தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்றுள்ளார்.

Also Read: சினிமாவிற்கு முன் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த சூரி.. பிரபல சீரியலில் நடித்திருக்கும் விடுதலை குமரேசன்

இந்நிலையில் சூரியின் ஆரம்பகால கட்டத்தில் அவருக்கு நிகழ்ந்த அவமானத்திற்கு இப்போது பதிலடி கொடுத்திருக்கிறார். சூரி, கலாப காதலன் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு ஒரு அலுவலகத்திற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு உள்ளவர்கள் இவரை நடிக்க சொல்லி இருக்கிறார்கள்.

சூரி நடிக்கும் பொழுது மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார். காரணம் அவர் 2 நாட்கள் சாப்பிடாமல் அங்கு சென்று இருக்கிறார். பின்னர் சாப்பாடு வாங்கி கொடுத்து அனுப்பி வைத்துள்ளார்கள். தற்போது சூரி பெரிய அளவில் முன்னேறிவிட்டார். தற்போது கதாநாயகனாக கூட நடித்த விடுதலை படம் வெற்றி அடைந்து 50 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபீஸில் கலெக்சன் ஆகிக்கொண்டிருக்கிறது.

Also Read: மனம் வெறுத்துப்போன விடுதலை பட நடிகர்.. பேங்க் வேலையை விட்டு சினிமா வந்தும் பிரயோஜனமில்ல

இவ்வாறு இருக்க, விடுதலை படத்திற்குப் பிறகு சூரிக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. இதனால் தனக்கென்று ஒரு அலுவலகம் வேண்டும் என்று பல பேரிடம் சொல்லி வைத்து காத்திருந்திருக்கிறார். அப்போது இவருக்கு தெரிந்தவர் ஒரு அலுவலகத்தை வாங்க அழைத்து சென்றுள்ளார். அந்த அலுவலகத்தை பார்த்தவுடன் சூரிக்கு ஆச்சரியம்.

‘இது நான் ஆரம்ப காலகட்டத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்ற அலுவலகம். இன்று விலைக்கு வாங்க நம்மிடமே வந்துள்ளது’ என கூறி அதை பெரும் தொகை கொடுத்து வாங்கி, தற்போது அதை தனது அலுவலகமாக வைத்துள்ளார் சூரி. ஏற்கனவே மீனா வசித்த வீட்டை வாங்கி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் சூரி. இப்போது அவர் வாங்கிய அலுவலகத்திற்கு இப்படி ஒரு பிளாஷ்பேக் இருக்கிறதா என பலரும் இதைப் பற்றி ஆர்வத்துடன் தெரிந்து கொள்கின்றனர்.

Also Read: காமெடிக்கு குட்பை சொன்ன சூரி.. சிவகார்த்திகேயனால் குவியும் வாய்ப்பு

Trending News