புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசு வீணா போகாது.. சூரி உருக்கம்

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்களில் நகைச்சுவை நடிகர் சூரி நடித்துள்ளார். விஷ்ணு விஷாலின் வெண்ணிலா கபடி குழு படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியால் பரோட்டா சூரி ஆக ஃபேமஸ் ஆனார். இதைத்தொடர்ந்து வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்திருந்தார்.

இதனால் விஷ்ணு விஷால் மற்றும் சூரி இடையே நல்ல நட்பு உருவாகியிருந்தது. சூரியிடம் விஷ்ணு விஷாலின் தந்தை மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் நிலம் வாங்கி தருவதாக 2.70 கோடி பணம் மோசடி செய்துள்ளதாக சூரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆனால் விஷ்ணு விஷால் தனது தந்தை மீது எந்த தவறும் இல்லை. சூரி பொய் வழக்கு சித்தரித்துள்ளார் என குற்றம்சாட்டி வந்தார். இந்நிலையில் இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது. போலீசார் விஷ்ணு விஷால் தந்தை, சூரி, தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் என ஒவ்வொரு இடமும் தனியாக பல மணி நேரம் விசாரித்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் சூரி சில விஷயங்களை கூறியுள்ளார். அதாவது கோர்ட்டும், காவல்துறையினரும் இருக்கின்றனர். நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசு அவ்வளவு எளிதில் வீணாகிப் போகிடாது. கண்டிப்பாக என் பக்கம் நியாயம் உள்ளது.

கடவுள் இருக்கிறார், கடவுளுக்கு அடுத்தபடியாக கோர்டை நம்புகிறேன். இந்த வழக்கை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கண்டிப்பாக இந்த வழக்கில் நியாயப்படி தீர்ப்பு வரும் என நம்புவதாக சூரி உருக்கமாக பேசியுள்ளார். மேலும் சூரி மீது தான் நியாயம் இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இதுவரை காமெடி நடிகராக மட்டுமே நடித்து வந்த சூரி முதல் முறையாக கதாநாயகனாக விடுதலை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குகிறார். மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மிக நீண்ட காலமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் விரைவில் இப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News