புதன்கிழமை, ஜனவரி 8, 2025

சசிகுமாரை மிஞ்சிய சூரி.. கருடனுக்காக வாங்கிய 4 மடங்கு சம்பளம்

Soori’s Salary: சூரி இப்போது ஹீரோவாக தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை அட்டகாசமாக தொடங்கி உள்ளார். விடுதலை படத்தின் மூலம் வியக்க வைத்த இவர் தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி, சசிகுமார் உடன் இணைந்து கருடன் ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார்.

ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கும் இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் சூரி, சசிகுமார் இருவருடன் இணைந்து உன்னி முகுந்தன், ஷிவதா, சமுத்திரகனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மார்ச் இறுதியில் வெளியாகும் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ சமீபத்தில்வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. அதை தொடர்ந்து தற்போது வெளியாகி உள்ள முதல் பாடலும் அட்டகாசமாக இருக்கிறது. மேலும் இதற்காக சூரி வாங்கி இருக்கும் சம்பளம் தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: கடைசி படம் மரண அடியா இருக்கணும்.. தளபதி 69-க்காக எட்டு இயக்குனர்களை வடிகட்டும் விஜய்

ஏனென்றால் சசிகுமாருக்கு இரண்டு கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சூரிக்கு 8 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம். இதற்கு முக்கிய காரணம் விடுதலை படத்தின் வெற்றி மட்டுமல்லாமல் சூரிக்கு இருக்கும் மவுசு தான். காமெடியனில் இருந்து ஹீரோவாக மாறி இருக்கும் இவருக்கு அடுத்தடுத்த படங்கள் குவிந்து கொண்டிருக்கிறது.

அதற்கான எதிர்பார்ப்பும் எக்கசக்கமாகவே உள்ளது. அதனாலேயே பந்தயக்குதிரை மேல் பணத்தை கட்டுவது போல் தயாரிப்பாளர்கள் இவருக்கு சம்பளத்தை வாரி வழங்கி வருகின்றனர். இப்படி டாப் கியரில் சென்று கொண்டிருக்கும் சூரிக்கு கருடன் மிகப்பெரிய பிரேக்காக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: வெற்றிமாறனுடன் கூட்டணி போடும் சசிகுமார்.. மீண்டும் கதாநாயகனாக அவதாரம் எடுக்கும் சூரி

Trending News