பொன்ராம் தமிழ்த்திரைப்பட இயக்குநராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் செயல்பட்டு வருகின்றார். இவர் (வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்) ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது எம்.ஜி.ஆர் மகன் என்னும் படத்தினை இயக்கி வருகின்றார்.
இவரது திரைப்படங்களில் நகைச்சுவைக்கு முக்கிய இடம் கொடுக்கப்படும். அதில் நகைச்சுவை நடிகர் சூரிக்கு பெரிய பங்கும் உண்டு. நடிகர் சூரி இல்லாமல் பொன்ராம் இயக்கும் முதல் திரைப்படம் எம்ஜிஆர் மகன்.
எம்ஜிஆர் மகன் திரைப்படத்தில் கதாநாயகனாக இயக்குனர் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி, சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் முழுநீள நகைச்சுவை கலந்த மசாலா திரைப்படமாக வெளிவர உள்ளது.
இயக்குனர் பொன்ராம் திரைப்படங்களில் முக்கிய நகைச்சுவைக் கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் சூரி தற்பொழுது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கதையின் நாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் பொன்ராம் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது நடிகர் சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் கதையின் நாயகனாக நடிப்பது பற்றி அவருடைய கருத்தை கேட்ட போது, மிகவும் ஆச்சரியமான ஒரு கருத்தை இயக்குனர் பொன்ராம் பதிவு செய்தார்.
அப்போது அவர் நடிகர் சூரியை ஒரு படத்தின் கதை நாயகனாக நடிக்க வைக்கும் திட்டம் மூன்று வருடங்களுக்கு முன்பே எனக்கு இருந்தது, இது குறித்து நான் நடிகர் சூரி இடமும் பேசியிருந்தேன் நான் ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களை முடித்துவிட்டு நடிகர் சூரியை கதை நாயகனாக நடிக்க அணுகியபோது அவர் என்னிடம் பங்காளி ஏற்கனவே வெற்றிமாறன் படத்தில் ஒப்பந்தம் ஆகிவிட்டேன் என்று சொன்னார்.
இதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்து தலைவரே இது ரொம்ப முக்கியமான வாய்ப்பு, வெற்றிமாறன் படத்தை முடித்துவிட்டு வாங்க நம்ம அடுத்த படம் கண்டிப்பாக செய்வோம் என்று வாழ்த்து கூறினேன்.
எனவே சூரியை கதையின் நாயகனாக முதலில் திட்டமிட்டது நான் தான் எனினும் நண்பர் வெற்றிமாறன் இயக்கத்தில் எனது அருமை நண்பர் சூரி நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் கொடுக்கிறது என்று இயக்குனர் பொன்ராம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மகிழ்ச்சியோடு கூறினார்