எல்லாருக்குமே ஒரு பெரிய ஹீரோவாகி விட வேண்டும் என்பது கனவுதான். அதுவும் இந்த காலத்தில் சமூக வலைதளங்களின் மூலம் தங்களைத் தாங்களே ஹீரோவாக நினைத்துக் கொண்டு எவ்வளவு பேர் சுற்றி வருகின்றனர். யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் என ஏராளமான சமூக வலைதளங்கள் மூலம் தங்களுடைய திறமைகளை நிரூபித்து தங்களுக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி ஆளாளுக்கு ஹீரோவாக வலம் வருகின்றனர்.
ஆனால் அப்போதெல்லாம் அப்படி இல்லை என்பது அனைவருக்குமே தெரியும். ஒரு ஹீரோ பெரிய ஹீரோ ஆவதே பெரிய விஷயம். அதிலும் ஒரு காமெடி ஹீரோ பெரிய நட்சத்திர ஹீரோவாக உயர்வது எவ்வளவு கடினமான செயல்.
அதில் தட்டுத்தடுமாறி கொண்டிருப்பவர் தான் சந்தானம். காமெடியனாக இருந்த ஹீரோவாக மாறியவர். ஆனால் சந்தானம் தன்னுடைய ஹீரோ பாதையை தவறாக தேர்ந்தெடுத்துவிட்டார் எனவே பலரும் கூறுகின்றனர். அவருக்கு காமெடி வரும் என்பதைத் தவிர தேவையில்லாமல் தன்னை ஒரு கமர்ஷியல் ஹீரோ என நினைத்துக் கொண்டது தான் அவருடைய தொடர் தோல்விக்கு காரணம் எனவும் கூறுகின்றனர். ஒரு சில படங்கள் வெற்றியை கொடுத்திருந்தாலும் பெரும்பாலான படங்கள் தோல்வியே.
ஆனால் சூரிக்கு ஹீரோ வேஷம் கண்டிப்பாக கைகொடுக்கும் என்றே கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கு காரணம் அவரது முதல் பட இயக்குனரே வெற்றிமாறன். இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களும் படம் செய்ய ஆசைப்படும் இயக்குனர்.
சந்தானம் கமர்ஷியல் ஹீரோ ஆக வேண்டுமென்ற ஆசையில் இயக்குனர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் காமெடி சண்டை என வேறு ரூட்டைப்பிடித்து தடுமாறிக் கொண்டிருக்கிறார். ஆனால் சூரி கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இயக்குனர்களுடன் பணியாற்ற விரும்புகிறார். மேலும் சந்தானத்தின் மீது ஒரு தனிப்பட்ட கருத்துள்ளது. நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என நினைக்காமல் நிறைய படங்கள் கொடுக்க வேண்டும் என்று நினைப்பதே அவருடைய தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
இதன் காரணமாகவே சூரி வருங்காலத்தில் ஒரு கவனிக்கப்படும் ஹீரோவாக வலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை, அதேபோல் சந்தானம் இன்னும் சில வருடங்களில் மீண்டும் காமெடியனாக மாறினாலும் ஆச்சரியமில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.