விடுதலை படத்திற்கு பிறகு சூரிக்கு இவ்வளவு துணிச்சலா.. அடுத்த பட அப்டேட்டை கொடுத்த குமரேசன்

சினிமாவில் இத்தனை வருடங்களாக காமெடி நடிகராக நடித்து கலக்கிய சூரி, இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலம் மாஸ் ஹீரோவாக குமரேசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். இதில் இவருடைய நடிப்பு எதார்த்தமாகவும் ரசிகர்கள் விரும்பும் வகையில் இருந்ததால் இனி நகைச்சுவை நடிகராக நடிப்பதற்கு வாய்ப்பில்லை.

அடுத்தடுத்து இவருக்கு ஹீரோவாக நடிப்பதற்காகவே வாய்ப்புகள் குவிகிறது. அதிலும் தற்போது வெளியாகி இருக்கும் தகவலின் படி, சூரி விடுதலை படத்தில் நடித்த பிறகு இவருக்கு இவ்வளவு துணிச்சலா என பலரும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அப்டேட் வெளியாகியுள்ளது.

Also Read: திரையில் காட்டாத 18+ விஷயங்களை ஓடிடியில் பார்க்கலாம்.. வெற்றிமாறனின் அதிரடி முடிவு

ஏனென்றால் குரு சோமசுந்தரம் நடித்து கலக்கிய மிகவும் சவால் நிறைந்த கதாபாத்திரத்தை தற்போது சூரி ஏற்று நடிக்க கமிட்டாகி இருக்கிறார். 2016 ஆம் ஆண்டு அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஆழமாக பேசிய ஜோக்கர் படத்தில் குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தில் குரு சோமசுந்தரம் தன்னுடைய உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிக்காட்டி படத்தை பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தார். இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. அப்படிப்பட்ட படத்தின் இரண்டாம் பாகத்தில் குரு சோமசுந்தரம் கதாபாத்திரத்தில் சூரி நடிக்கப் போகிறார்.

Also Read: விடுதலை பார்ட்-2க்கு பின் மீண்டும் இணையும் வெற்றிமாறன்-சூரி காம்போ.. அதுலயும் ஒரு ட்விஸ்ட் இருக்கு

நிறைய படங்களில் காமெடி நடிகராக பார்த்த சூரியை, விடுதலை படத்தில் ஹீரோவாக பார்க்க முடிந்தது. ஆனால் ஜோக்கர் 2 படத்தில் காமெடியனாகவும், கதாநாயகனாகவும் இரண்டு வேடத்தில் சூரி நடிக்க உள்ளார். இது நல்ல விஷயம் என்றாலும் டஃப் நிறைந்த கதாபாத்திரத்தில் சரியாக நடித்து விடுவாரா என்பது சந்தேகம் தான்.

ஆனால் இதில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் சூரி உறுதியாக இருக்கிறார். மேலும் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படம் உருவாகி வருகிறது. இதை நிவின் பாலி, அஞ்சலி முக்கிய கதாபாத்திரம் நடித்திருக்கின்றனர். அவர்களுடன் சூரியும் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்திற்கான டப்பிங் வேலைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் விரைவில் ரிலீஸ் தேதியும் வெளியாகியுள்ளது.

Also Read: கிளுகிளுப்பாக எழுதப்பட்ட 6 பாடல்கள்.. அதிர்ந்து போய் சென்சார் போர்டு கட் செய்த வரிகள்