ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

வெற்றிமாறனுடன் கூட்டணி போடும் சசிகுமார்.. மீண்டும் கதாநாயகனாக அவதாரம் எடுக்கும் சூரி

Actor Soori Next Movie: பல வருடங்களாக தமிழ் சினிமாவில் காமெடியனாக பார்த்த சூரி, வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து இவருக்கு ஹீரோவாக நடிப்பதற்கான பட வாய்ப்புகள் மட்டுமே குவிந்து கொண்டிருக்கிறது.

அதுவும் இப்போது சூரி மீண்டும் கதாநாயகனாக அவதாரம் எடுத்திருக்கும் படத்தின் கதையை வெற்றிமாறன் தான் எழுதி இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்குகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: சிவகார்த்திகேயன், தனுஷ் ஹிட் லிஸ்டில் சேர்ந்த சூரி.. கருடனாக புதிய அவதாரம் ஜெயிக்குமா?

சூரி, சசிகுமார் மட்டுமல்ல உன்னி முகுந்தனும் இந்த படத்தில் ஸ்ட்ராங்கான கேரக்டரில் நடிக்கிறார். இவர்களுடன் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்த ரோஷினி ஹரிப்பிரியன், இரவின் நிழல் படத்தில் நடித்த பிரிகிடா உள்ளிட்டோரும் இணைந்து நடிக்கின்றனர்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு இன்று கும்பகோணத்தில் பூஜையுடன் துவங்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது, இந்த படத்திற்கு ‘கருடன்’ என டைட்டில் வைத்துள்ளனர்.

Also Read: சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் வெற்றிமாறன்.. சூரியை வைத்து மீண்டும் கல்லா கட்ட போட்ட திட்டம்

மேலும் இதில் நடிக்கும் சசிகுமார் பல வருடங்களாக பட தயாரிப்புகளும் இல்லை, படம் இயக்குவதும் இல்லை. அயோத்தி என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆனார். படம் இயக்குவது ஒரு புறம் இருந்தாலும் நடிப்பதில் அதிக ஆர்வமாக உள்ளார். அடுத்து இவர் நடிக்கும் படம் கருடன்.

எதிர்நீச்சல், கொடி, காக்கி சட்டை போன்ற படங்களின் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கும், இந்த படத்திற்கு கதையை வெற்றிமாறன் எழுதிக் கொடுத்துள்ளார். அதனால் இந்த படம் அனைவரும் பேசும் படமாக அமைந்துள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

‘கருடன்’ படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கப்பட்டது

soori-next-flim-cinemapettai
soori-next-flim-cinemapettai

Also Read: கணவன் இறப்பு, நடுத்தெருவுக்கு வந்த காமெடி நடிகரின் குடும்பம்.. கண்டுகொள்ளாத சிவகார்த்திகேயன், சூரி

Trending News