காசு கொடுத்து கூட்டத்தை சேர்த்த சூரி..  கதாநாயகனாக நடித்தால் இப்படி விளம்பரம் தேடணுமா.!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த விடுதலை படம் பல வருடங்களுக்கு பிறகு முடிவடைந்து, இந்த மாத கடைசியில் வெளியாகிறது. படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்திற்கான பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் சூரி மட்டுமே நிறைய நேரம் பேசினார். நிறைய கஷ்டங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார்.

ஆனால் இவர் பேசும்போதும் சரி, இவர் பெயரை யாரும் சொன்னாலும் சரி உச்ச நட்சத்திரங்கள் பெயர்களை கூறும்பொழுது கைத்தட்டல் வருவது மாதிரி இவருக்கு வந்து கொண்டே இருந்தது. அதன் பின் மேடையில் பட குழுவினர் அமர்ந்து படத்தைப் பற்றி பேசினார்கள். யார் மேடையில் பேசினாலும் சூரி என்று சொன்னால் சத்தம் போடுங்கள் என்று சொல்லி கூட்டத்தை திரட்டியது போலவே அங்கிருப்பவர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

Also Read: பல வருடங்களாக ஏமாற்றிய வெற்றிமாறன்.. எல்லாத்தையும் இழந்து நொந்து நூடுல்ஸ் ஆன சூரி

அவர்களது சத்தம் ஒரு கட்டத்தில் ஓவராக போக சூரியே எழுந்து நின்று  கையெடுத்து கும்பிட்டு நிறுத்த சொன்னார். இதெல்லாம் சூரிக்கு தெரியாமல் நடந்திருக்க முடியாது. இதே போன்று தான் காமெடி நடிகர் சந்தானமும் ஹீரோவாக நடித்த போது அவரது பட விழாக்களிலும் இப்படி ஆட்களை வரவழைத்து ஆரவாரம் செய்ய சொன்னார்கள். அவரது வழியில் இப்போது சூரி சேர்ந்து விட்டார்.

கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்ததும் காசு கொடுத்து கூட்டத்தை சேர்க்க விளம்பரம்  தேடிக் கொண்டிருக்கிறார் என்று விழாவிற்கு வந்தவர்கள் முணுமுணுத்தனர். இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னதாக இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களை இசைக் குழுவினர் பாடிக்கொண்டிருந்தனர்.  ஆனால் அதைக் கூட கேட்க விடாமல் அவ்வப்போது  சூரியின் ரசிகர்கள் கத்திக்கொண்டே இருந்தனர்.

Also Read: வெற்றிமாறனுடைய பெரிய மைனஸ்.. தலையில் துண்டை போடவைக்கும் படுபாதக செயல்

இந்த நிகழ்ச்சியில் இருப்பவர்கள் ரசிகர்களை விட அரசியல்வாதிகளின் கூட்டத்திற்கு தயார் செய்யப்பட்ட ஆதரவாளர்கள் போலவே நடந்து கொண்டனர். மேலும்  இவர்கள் ரசிகர் மன்ற பேனர்களுடன் விழா அரங்கில் அமர்ந்து கொண்டு சூரி என்ற பெயரை உச்சரித்து சத்தமிட்டு கொண்டிருந்தனர். கடைசியில் இளையராஜா வந்த பிறகு நேரடியாக மேடை ஏறி இசையை வெளியிட்டார். அவர் பேசும்போது சத்தம் போட்டனர். இதனால் தான் இளையராஜா கடுப்பாகி மைக்கை தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டார். 

காரணம் இந்த விழாவிற்காக சூரி தமது சொந்தக்காரர்கள் மற்றும் நட்பு வட்டாரங்கள் மூலம் 4, 5 வேன்களில் மதுரையிலிருந்து செலவு செய்து ஆட்களை அழைத்து வந்துள்ளார். ஒரு படம் நன்றாக நடித்துள்ளார். அதற்கான பெயரும் அவர் வாங்கியுள்ளார். ஆனால் அதற்குள்ளே பணத்தை கொடுத்து ஆட்களை அழைத்து வந்து கைத்தட்டல் வாங்க வேண்டும் என்று செய்தது சினிமாவில் அவரை கேவலமாக பார்க்கிறார்கள்.

Also Read: விஜய் சேதுபதி இடத்தை பிடித்த ராகவா லாரன்ஸ்.. கையில் இத்தனை படங்களா?