புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சூரியின் நடிப்பில் மிரட்டிய விடுதலை.. ரெண்டு மணி நேரத்தில் ஹார்ட் பீட்டை எகிற செய்த கதைக்களம்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் காமெடி நடிகர் சூரி முதன்முதலாக ஹீரோவாக நடித்த விடுதலை திரைப்படம் இன்று ரிலீசானது. இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மீண்டும் சில வருடங்களுக்குப் பிறகு இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படம் முழுக்க முழுக்க பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்களை வாங்கி இருக்கிறது.

இந்தப் படத்தை சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது ஒரு படம் அல்ல சிறந்த அனுபவம் என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. எப்போதுமே வெற்றிமாறன் திரைக்கதையில் தோற்றதில்லை, அதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக விடுதலை திரைப்படம் இன்று பயங்கரமாக ஸ்கோர் செய்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read:6வது வெற்றியை கொடுக்குமா வெற்றிமாறனின் விடுதலை.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

காமெடி நடிகர் சூரி காமெடியனாக பல படங்கள் பண்ணியிருந்தாலும் நெட்டிசன்களால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு இருக்கிறார். இவர் முதலில் ஹீரோவாக விடுதலை படத்தில் நடிக்கிறார் என்பது அனைவருக்குமே ஆச்சரியமாகவும், எதற்கு இந்த வேண்டாத வேலை என்பது போலவும் தான் இருந்தது. ஆனால் இன்று அனைத்திற்கும் தன்னுடைய சிறந்த நடிப்பினால் பதில் சொல்லிவிட்டார் சூரி.

வந்த வாய்ப்பை ஏனோதானோ என்று சிதறவிடாமல் இதுதான் தனக்கான களம் என்பதை உணர்ந்து கடின உழைப்பை போட்டிருக்கிறார் சூரி. ஒரு காமெடி நடிகரால் இப்படி நடிக்க முடியுமா என அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளி விட்டார். காதல், அப்பாவித்தனம், நேர்மை என அத்தனை உணர்ச்சிகளையும் சிறப்பாக காட்டியிருந்தார்.

Also Read:விடுதலை பார்ட் 2-வில் ஹீரோ சூரி இல்ல.. கிளைமேக்ஸை வேற லெவலில் செதுக்கியிருக்கும் வெற்றிமாறன்

சினிமாவில் அவ்வப்போது போலீஸ் டார்ச்சர்கள் பற்றிய திரைப்படம் வரும். அந்த வரிசையில் விடுதலை படம் வந்திருந்தாலும் இந்த அளவுக்கு போலீஸ் இருப்பார்களா என்று யோசிக்க வைத்திருக்கிறது. கொஞ்சமும் ஈவு இரக்கமில்லாத போலீஸ் அதிகாரிகளாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சேத்தன் நடித்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் இந்த படம் ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இரண்டு மணி நேரமும் எங்கே இருக்கிறோம் என்பதை மறந்து படத்தைப் பார்க்கும் அளவுக்கு கதைக்களம் பிபி எகிறும் அளவிற்கு இருக்கிறதாம். இனி சூரியை ஹீரோவாக வைத்து பண்ண தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நிற்பார்கள் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

Also Read:முக்கியமான இந்த 7 காரணங்கள்.. மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய வெற்றிமாறனின் விடுதலை

 

 

Trending News