திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சூரி கவின் கேட்கும் சம்பளத்தால் காதில் இருந்து வரும் புகை.. ஓட்டப்பந்தய போட்டியே தாண்டி ஓடும் தயாரிப்பாளர்கள்

Soori and Kavin: வாழ்க்கை ஒரு வட்டம் கீழே இருப்பவர்கள் மேலே வரலாம், மேலே இருப்பவர்கள் கீழே வர வாய்ப்பு உண்டு என்று சொல்வார்கள். அதுபோல்தான் சூரி, ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டர் மூலம் ஒரு சில படங்களில் அவ்வப்போது முகத்தை காட்டிக் கொண்டு வந்தார். அப்படி தான் புரோட்டா சூரி என்ற பெயருடன் பரிச்சயமானார்.

அதனை கெட்டியாக பிடித்துக் கொண்டு தொடர்ந்து பல படங்களில் காமெடியனாகவும், ஹீரோ உடன் சேர்ந்து முக்கால்வாசி படங்களில் தொடர்ந்து ட்ராவல் ஆகி வந்தார். அப்படிப்பட்ட இவருக்கு கதையின் நாயகனாக கிடைத்த வாய்ப்பு தான் விடுதலை படத்தில் குமரேசன் கேரக்டர். இதில் கொஞ்சம் கூட காமெடியன் தானே இவர் என்று சொல்ல முடியாத அளவிற்கு சீரியஸான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரிடமும் கைத்தட்டலை பெற்றிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். அத்துடன் இவருக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பின் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளில் கதாநாயகனாக கமிட் ஆகி வருகிறார். அப்படி தற்போது கமிட் ஆகி இருக்கும் படம் தான் கருடன் மற்றும் கொட்டாகாளி. இப்படி இவருடைய மார்க்கெட் ஒவ்வொரு படத்திற்கும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

கெத்து காட்டும் கவின்

அதனால் இவருடைய சம்பளத்தை தயாரிப்பாளரிடம் டிமாண்டாக கேட்கும் அளவிற்கு 8 கோடி வேண்டுமென்று டீல் பேசி வருகிறார். அதேபோல் நடிகர் கவினும் ஆரம்பத்தில் வாய்ப்பு இல்லாமல் ஹீரோவின் நண்பராக நடித்து வந்தார். பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் இருந்து வரவேற்பை பெற்று அதன் பின் ஹீரோவாக நடித்த இரண்டு படமும் ஹிட் ஆகிவிட்டது.

இதனைத் தொடர்ந்து இவரோட மார்க்கெட்டும் அதிகரித்ததால் தற்போது கிஸ் மற்றும் ஸ்டார் போன்ற இரண்டு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் நடித்தால் அந்த படம் நஷ்டம் ஏற்படாத அளவிற்கு வசூலை கொடுத்து விடுகிறது. அந்த ஒரு தைரியத்தால் கவின் தற்போது 7கோடி சம்பளம் வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் கரராக கேட்டுவிட்டார்.

இப்படி வளர்ந்து வரும் இந்த இரண்டு ஹீரோக்கள் கேட்ட சம்பளத்தால் தயாரிப்பாளர்கள் இவர்கள் இருக்கும் பக்கம் தலை வைத்து கூட படுக்கக் கூடாது என்று ஓட்டப்பந்தய போட்டியே விட தாண்டி ஓடிப் போகிறார்கள். ஆனால் என்ன ஓடினாலும் கடைசியில் இவர்கள் கேட்ட சம்பளத்தை கொடுத்து நடிக்க வைப்பது தவிர அவர்களுக்கு வேறு வழியும் இல்லை.

Trending News