வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

முறுக்கு மீசை, சிக்ஸ் பேக் என மாஸ் காட்டும் சூரி.. வெற்றிமாறன் படத்துக்கு அப்புறம் ஆளே மாறிட்டாப்புல!

நடிகர் சூரி தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒரு சில படங்களில் தனது காமெடிகளில் சொதப்பினாலும் அடுத்தடுத்த படங்களில் சரியான கூட்டணி அமைத்து மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.

தற்போது காமெடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோவாக மாறி வருகிறார். அதற்கு அடித்தளமிடும் வகையில் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

விடுதலை என பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். விடுதலை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது.

விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இன்னும் வெற்றிமாறன் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத போது சூரிக்கு எப்படி கிடைத்தது என பல நடிகர்கள் அவர் மீது பொறாமையில் இருக்கிறார்களாம்.

soori-cinemapettai-0
soori-cinemapettai-0

அதுமட்டுமில்லாமல் வெற்றிமாறன் படத்திற்கு பிறகு சூரியின் நடை உடை பாவனை அனைத்துமே மாறி பக்குவமான மனிதராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் கவனத்துடன் கையாண்டு வருகிறாராம்.

மேலும் தன்னுடைய உடல் தோற்றத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே சிக்ஸ்பேக் வைத்துள்ள சூரி தற்போது ஹாலிவுட் நடிகர் ரேஞ்சுக்கு ஸ்டைலிஷ் போட்டோ ஷூட் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

soori-cinemapettai-01
soori-cinemapettai-01

Trending News