வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சூரி வீட்டுக் கல்யாணத்திற்கு வந்த போலீஸ்.. அதிர்ச்சியாக்கிய சம்பவம்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருப்பவர் சூரி. இவர் ஆரம்ப காலத்தில் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும் இடைப்பட்ட காலத்தில் காமெடியனாக நுழைந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

தற்போது காமெடியனாக பல படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை எனும் படத்தின் மூலம் ஹீரோவாக தனது பயணத்தை தொடங்கி உள்ளார். தற்போது ஹீரோவாக நடிக்கும் முதல் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நடிகர் சூரி வீட்டின் விசேஷத்திற்கு காவல்துறையினர் வந்த சம்பவம் அங்கிருந்த மக்களை அதிர்ச்சி ஆக்கியது. அதாவது சூரி அண்ணன் மகளின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதனால் திருமண விழாவில் என்ன நடக்கிறது என்பதை கண்டுகொள்ள முடியாத அளவிற்கு ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

ஆனால் மணப்பெண் அறையில் 10 சவரன் மதிப்புள்ள நகையை மர்ம நபர்கள் திருடி உள்ள சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்துள்ளது. இதையடுத்து சூரி காவல்துறையினரிடம் விசேஷத்தில் நடந்த திருட்டைப் பற்றி முழுமையாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.

soori
soori

ஆரம்பத்தில் சூரி வீட்டின் விசேஷத்திற்கு போலீஸார் வந்தது அங்கு இருப்பவர்கள் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்துள்ளது. ஆனால் சூரி போலீசாரிடம் கூறியதன் அடிப்படையில் தான் வந்துள்ளார்கள் என்பது பின்பு தான் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.

Trending News