சினிமாவில் நடிக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் சொந்த தொழில் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் காமெடி நடிகர் சூரி மதுரையில் சொந்தமாக ஹோட்டல் பிசினஸ் செய்து வருகிறார்.
அம்மன் என்ற பெயரில் ஹோட்டலை ஆரம்பித்த சூரி மதுரையில் பல கிளைகளை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அங்கு அவர் குறைந்த விலையில் தரமான உணவை மக்களுக்கு கொடுத்து வருகிறார். உணவின் சுவையும், தரமும் அருமையாக இருப்பதால் அந்த ஹோட்டலுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கிறது.
Also read: வெற்றிமாறனிடம் மல்லுக்கட்டியும் புரோஜனம் இல்லை.. சந்தானத்துக்கு போட்டியாக கலக்கப் போகும் சூரி
இந்நிலையில் சூரியின் ஹோட்டலில் வருமான வரி துறையினர் அதிரடியாக விசாரணையில் இறங்கி இருக்கின்றனர். ஏனென்றால் அந்த ஹோட்டலில் ஜிஎஸ்டி இல்லாமல் பில் போட்டு வருவதாகவும், இதன் மூலம் இன்கம்டேக்ஸ் கட்டாமல் சூரி டிமிக்கி கொடுத்து வருவதாகவும் கூறுகின்றனர்.
அதனால் தற்போது அந்த ஹோட்டல் மேனேஜரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் சூரியின் ஹோட்டல் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதை கண்டுபிடித்துள்ளனர். குறைந்த விலைக்கு உணவை கொடுப்பதால் அவருக்கு தினமும் 25 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
Also read: புரோட்டா சூரியை பொறிவைத்து பிடித்த அதிகாரிகள்.. அப்படி என்ன தப்பு பண்ணிட்டாரு தெரியலையே.!
இதையெல்லாம் அதிகாரிகளிடம் அந்த ஹோட்டல் மேனேஜர் தெளிவாக விளக்கிக் கூறியிருக்கிறார். இருப்பினும் அவர்கள் ஒட்டுமொத்த வரவு செலவு பற்றிய கணக்குகளை விசாரித்து இருக்கின்றனர். மேலும் அதற்கான ஸ்டேட்மெண்ட்டையும் அவர்கள் கொடுக்கும்படி கூறியிருக்கின்றனர்.
பொதுமக்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையுடனும் இயங்கிக் கொண்டிருந்த சூரியின் ஹோட்டல் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகளின் பிடியில் சிக்கி இருப்பது அந்த வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. தற்போது விடுதலை திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சூரி இப்படி ஒரு சிக்கலால் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். விரைவில் இந்த பிரச்சனையை சரி செய்ய அவர் முயற்சி செய்து வருகிறார்.
Also read: சந்தானத்தை பழிவாங்க நினைக்கும் பிரபலங்கள்.. கட்டி அரவணைத்துக் கொண்ட யோகி பாபு