நடிகர் சூரியின் விடுதலை 2 படம் வரும் 20-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. நடிகர் சூரியின் வளர்ச்சி என்பது, எதோ திடீரென்று வந்த ஒன்று கிடையாது. பல வருட கடின உழைப்பின் பலன் தான் இன்று அவர் சிம்மாசனத்தில் உட்கார்ந்து இருக்கிறார். அப்போது, ஆணவம் இல்லாமல் கண்ணியமாகவும் எளிமையாகவும் வருகிறார்.
விடுதலை 2 படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. அப்படி கே.எஸ் ரவிக்குமார் ஹோஸ்ட் பண்ணுவது போல ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது. அதில் சூரி இதுவரை நீங்கள் எத்தனை படத்தில் நடித்திருக்கிறீர்கள் என்ற கேள்வியை முன்வைக்கும்போது, சூரி சொன்ன பதிலை கேட்டு கே.எஸ். ரவிக்குமார் வாயை பிளந்துவிட்டார்.
இதான்டா வளர்ச்சி..
சூரி, ‘சார்.. நான் உங்க படத்துல வேலை செய்திருக்கிறேன்..’ என்று கூறும்போது, கே.எஸ்.ரவிகுமாரே ஆச்சரியத்தில் “என் படத்திலா ” என்று வாயை பிளந்தபடி கேட்கிறார். அப்போது சூரி சொல்கிறார், “ஆமாம் சார்.. உங்களோட வரலாறு படத்துல வேலை செய்திருக்கிறேன்..
வின்னர் படத்தில் வந்திருக்கிறேன்.. உங்களோட பல படங்களில் Electrician – ஆக வேலை செய்திருக்கிறேன்.. ஹீரோ-க்கு Fan பிடிக்கும் வேலை செய்திருக்கிறேன்..”
“ஒரு 95 படங்களில் இப்படியான வேலைகள் எல்லாமே செய்திருப்பேன்..” என்று அவர் கூறும்போது, கே.எஸ்.ரவிக்குமார் ஆச்சர்யத்தில், வாயை பிளந்தபடி கேட்கிறார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆக, இதான்டா வளர்ச்சி என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.. மேலும் ஒரு காமெடியன் ஹீரோவாக ஆகும்போது, ஏகப்பட்ட விமர்சனங்களை முன்வைப்பார்கள். Haters அதிகமாக உருவாக்குவார்கள்.
ஆனால் சூரி ஹீரோ ஆகும்போது மட்டும் தான் மக்களே அந்த வளர்ச்சியை கண்டு பெருமை பட்டார்கள். தான் சாதித்ததை போல கொண்டாடினார்கள். Haters இல்லாத ஒரு நபராக தான் அவர் பார்க்கப்படுகிறார்.