வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஹீரோவான பின்பு உடம்பை ஃபிட்டாக மாற்றிய சூரி.. இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக அறிமுகமான பல நடிகர்கள் தற்போது ஹீரோவாக நடித்து வருகின்றனர். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, சந்தானம் ஆகியோரை தொடர்ந்து தற்போது சூரியும் கதாநாயகன் அவதாரம் எடுத்துள்ளார்.

பெரும்பாலும் சிவகார்த்திகேயன், சூரி காம்போவில் வெளியாகும் காமெடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. தொடர்ந்து சூரி பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்தார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக சூரி நடித்துள்ளார். அதேபோல் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக விடுதலை படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சூரி வொர்க் அவுட் செய்யும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. சூரி சீமராஜா படத்தில் ஒரு சிறிய காட்சிக்காக சிக்ஸ்பேக் வைத்து இருப்பார். அஜித் ஒரு முறை சூரிக்கு போன் செய்து ஒரு சிறிய காட்சிக்காக இவ்வளவு மெனக்கெட்டு சிக்ஸ்பேக் வைத்ததற்கு பாராட்டியதாக தகவல் வெளியானது.

தற்போது ஹீரோவாக தன்னை மெருகேற்றி உள்ளதால் உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள பல உடற்பயிற்சிகளை சூரி செய்து வருகிறார். மேலும் விடுதலை படம் சூரியின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

soori
Soori

மேலும் விடுதலைப் படத்திற்காக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக வேறு எந்த படத்திலும் சூரி ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார். ஏனென்றால் விடுதலை படத்தின் கெட்டப்புடன் மற்ற படங்களில் நடிக்க முடியாது என்பதற்காக பட வாய்ப்புகளை தவிர்த்துள்ளார். அவற்றுக்கெல்லாம் சேர்த்து விடுதலை படம் ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என சூரி ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

soori
Soori

Trending News