வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இனி காமெடியானாக நடிக்க மாட்டீர்களா எனக் கேட்ட சிவகார்த்திகேயன்.. சூரியின் பதிலை பார்த்தீர்களா.!

நேற்று நடிகர் சூரியின் 44வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில் நேற்று சூரி சூர்யா இணைந்து நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

1995-ல் கோடம்பாக்கம் பகுதிகளில் ஏதேனும் ஒரு ரோல் கிடைக்காதா என்கிற ஏக்கத்தோடு சுற்றித்திரிந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களில் சூரியும் ஒருவர்.சில படங்களில் சிறு குறு வேடங்களில் நடித்தவருக்கு சரியான படமாக அமைந்தது.

வெண்ணிலா கபடிக்குழு இந்த படத்தில் வருகின்ற 50 பரோட்டா காட்சியை யாரும் மறக்க முடியாது சூரியின் முகம் சரியாக கவனிக்கப்பட்டது எனறால் அது அப்போதிலிருந்து தான் அந்த படத்திற்கு பிறகு சாதாரன சூரியாக இருந்தவர் பரோட்டா சூரியாக அவதரித்தார்.

தொடர்ந்து சிவகார்த்திகேயன் விஜய் அஜித் என பல்வேறு முன்ணணி நடிகர்களோடு நடித்து வந்த சூரி விடுதலை என்கிற படத்தில் நாயகனாகவும் அவதாரம் எடுக்கிறார். சந்தானம் வடிவேலு விவேக்கை தொடர்நது சூரியும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். இந்த படத்தில் ஒரு முக்கியமான ரோலில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தககது.

soori
soori

நேற்று சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களை பதிவேற்றிய இயக்குனர் பாண்டிய ராஜன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அவணி சூளாமனி என குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் சூரியின் கேரக்டர் பெயரை கூறியுள்ளார் என சூரியின் ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடி வருகின்றனர்.

அதே போட்டோவில் நடிகர் சூர்யாவின் போட்டோவை தனியாக க்ராப் செய்து சூர்யாவின் ரசிகர்கள் அடுத்த அப்டேட்டாக கூறி கொண்டாடி மகிழ்கின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அண்ணன் ஹீரோவாகிட்டார் நாம சங்கத்து இனி வேற ஆள தான் பாக்கனும் என காமெடியாக ஒரு வாழ்த்துக்களை கூறியிருந்தார்.

முதல் முறையாக சூப்பர் ஸ்டாருடன் இணைந்த சூரிக்கு அண்ணாத்த படத்திற்காக சூரியின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அப்படியெல்லாம் விட முடியாது தலைவரே சர்க்கஸ் சிங்கம் இருக்கணும் சங்கம்தான் செயலாளர் இருக்கணும் என சிவகார்த்திகேயனுக்கு பதிலளித்துள்ளார்.

Trending News