வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வெற்றிமாறன், தனுஷ் படத்துக்கு கூட இப்படி இல்லையேப்பா.. டாப் கியரில் சூரியின் விடுதலை படம்

தமிழ் சினிமாவில் வெற்றி கூட்டணியாக வலம் வந்து கொண்டிருக்கும் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் படத்திற்கு கூட வெற்றிமாறன் இவ்வளவு பெரிய வேலையை செய்ததில்லையே என ஆச்சரியப்படுகிறதாம் கோலிவுட் வட்டாரம்.

வெற்றிமாறன் படங்கள் என்றாலே அனைவருக்கும் ஒரு விதமான எதிர்பார்ப்பு ஏற்பட்டு விடுகிறது. அதற்கு காரணமே அவர் மற்றவர்களைப் போல் எங்கிருந்தும் கதையை திருடாமல் புத்தகத்தில் இருந்து ஒரு கருவை மையமாக வைத்து திரைப்படமாக எடுத்து வருகிறார்.

அதுவும் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இணைந்து விட்டால் அந்த படத்திற்கு விருதுகளை எடுத்து ஒதுக்கிவைத்து விடலாம். அந்த அளவுக்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். இதுவரை வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வந்த பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற அனைத்துமே பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.

5ஆவது முறையாகவும் இந்த கூட்டணி விரைவில் இணைய உள்ளது. ஆனால் அதற்கு முன்பாக வெற்றிமாறன் காமெடி நடிகர் சூரியை வைத்து விடுதலை எனும் படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது விஜய்சேதுபதிக்கு இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருப்பதால் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் வெற்றிமாறனின் விடுதலை படத்தை ஐந்து மொழிகளில் வெளியிடுவதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறாராம் தயாரிப்பு நிறுவனம்.

வெற்றிமாறன் தனுஷ் படங்களுக்கு கூட அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படி ஒரு வேலையை செய்ததில்லை. இந்நிலையில் சூரிக்கு முதல் படமே ஜாக்பாட் அடித்தது போல் ஆகிவிட்டதால் மனுசன் ஏகபோக சந்தோசத்தில் உள்ளாராம். இறுதி கட்டத்தில் உள்ள விடுதலை திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

viduthalai-vetrimaran-firstlook-poster
viduthalai-vetrimaran-firstlook-poster

Trending News