வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கௌதம் மேனனுக்கு மாஸ் கேரக்டர் கொடுத்த வெற்றிமாறன்.. தெறிக்க விடலாமா.!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. வெற்றிமாறன் படம் என்றாலே அதற்கு தனி மவுசு என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு தனது படத்தின் கதை களத்தை ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் அருமையாக கொண்டுபோய் சேர்ப்பார்.

வெற்றிமாறன் இயக்கிய படங்கள் அனைத்துமே ஏதாவது ஒரு நாவலைத் தழுவி தான் இருக்கும். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துவரும் விடுதலை திரைப்படமும் ஒரு நாவலை மையமாகக் கொண்டதுதான். மேலும் இப்படத்தில் நாவலில் இடம்பெற்ற காட்சிகள் விட ஒரு சிலகாட்சிகளை வெற்றிமாறன் மாற்றி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக இருப்பவர்கள் எந்த அளவிற்கு தன் கீழ் வேலை செய்யும் பணியாட்களை அவதூராக நடத்துகிறார்கள். இதனால் அவர்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க காவல் துறையில் நடக்கும் அவமானங்களையும், அவதூறுகளையும் மையமாகக் கொண்டு விடுதலை படம் உருவாகியுள்ளது.

gautham-menon

தற்போது வெற்றிமாறன் விடுதலை படத்தில் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதற்குகௌதம் வாசுதேவ் மேனனை அணுகியுள்ளார். படத்தின் கதை மற்றும் தனது கதாபாத்திரத்தை முழுமையாக கேட்டு விட்டு கண்டிப்பாக இந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என கவுதம் வாசுதேவ் மேனன் சம்மதித்துள்ளார்.

சமீபகாலமாக கௌதம் மேனன் அனைத்து படங்களிலும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது விடுதலை படத்திலும் கௌதம் மேனன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தில் கௌதம் மேனன் நடிப்பு அனைவராலும் பாராட்டப்படும் என வெற்றி மாறன் கூறியுள்ளார்.

Trending News