சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சினிமாவிற்கு முன் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த சூரி.. பிரபல சீரியலில் நடித்திருக்கும் விடுதலை குமரேசன்

விடுதலை படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் சூரி. வெற்றிமாறன் இயக்கத்தில் நான்கு வருடங்களாக உருவான விடுதலை படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டை பெற்று வருகிறது. இப்படத்தில் சூரியை வேறு ஒரு உருவமாய் காட்டி இருந்தார் வெற்றிமாறன்.

மேலும் சூரிக்குள் இப்படி ஒரு திறமை இருக்கிறதா என பலரையும் ஆச்சரிய பட வைத்திருந்தார். இந்நிலையில் சூரி காமெடி நடிகராக தான் சினிமாவில் நுழைந்தார் என பலர் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் சிவகார்த்திகேயன், சந்தானம் போல சூரியும் சின்னத்திரையில் இருந்து தான் வெள்ளித்திரையில் வாய்ப்பு பெற்று இருக்கிறார்.

Also Read: மனம் வெறுத்துப்போன விடுதலை பட நடிகர்.. பேங்க் வேலையை விட்டு சினிமா வந்தும் பிரயோஜனமில்ல

அதாவது சின்னத்திரையின் தளபதி என்று அழைக்கப்படும் சஞ்சீவ் நடிப்பில் வெளியான தொடர் திருமதி செல்வம். இந்த தொடரில் சஞ்சீவ் செல்வம் என்ற மெக்கானிக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் அவருடன் வேலை பார்க்கும் மற்றொரு மெக்கானிக் கதாபாத்திரத்தில் சூரி நடித்திருந்தார்.

அதன் பின்பு ஒரு சில படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரிக்கு வெண்ணிலா கபடி குழு படத்தில் புரோட்டா காமெடி மிகப்பெரிய அறிமுகமாக அமைந்தது. அதன் பிறகு தான் டாப் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை சூரி பெற்றார். ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடன் சூரி நடித்திருந்தார்.

Also Read: பசி மயக்கத்தில் விழுந்து கிடந்த சூரி.. . அதே இடத்தில் விஸ்வரூபம் எடுத்த விடுதலை குமரேசன்

மேலும் வடிவேலு, சந்தானம் போன்ற காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிக்க இறங்கியதால் காமெடி கதாபாத்திரங்கள் சூரியை நாடி வந்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு பட்டையை கிளப்பி வந்தார். அந்த சமயத்தில் தான் வெற்றிமாறனின் பார்வை சூரியின் மீது பட்டுள்ளது. விடுதலை என்ற அற்புதமான படம் சூரிக்கு கிடைத்தது.

ஆனாலும் இதில் சிறு அலட்சியம் கூட எடுக்கமால் கஷ்டமான காட்சிகளையும் சூரியே மெனக்கெட்டு நடித்தாராம். இதை வெற்றிமாறனே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அப்படி சூரியின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு தான் விடுதலை படம் பரிசாக கிடைத்துள்ளது.

Also Read: விடுதலை டீமுக்கு அடித்த லக்.. மகிழ்விக்க தயாரிப்பாளர் வாரி வழங்கிய பரிசு!

Trending News