வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வசூல் வேட்டையாடும் சூரியின் கருடன்.. 2ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்

Garudan Collection: துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில் கருடன் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்திற்கு முதல் காட்சியிலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த காட்சிகளிலும் நல்ல விமர்சனங்கள் வர தொடங்கியது. இதுவே படத்தின் வசூலுக்கும் பக்க பலமாக இருக்கிறது. அதன்படி முதல் நாளில் கருடன் மூன்று கோடியை வசூலித்திருந்தது.

அதைத்தொடர்ந்து சூரியின் நடிப்புக்கு எல்லா பக்கம் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதிலும் அந்த இடைவேளை காட்சி யாரும் எதிர்பார்க்காத மெய்சிலிர்ப்பு தான்.

வசூல் வேட்டையில் சூரி

அதேபோல் கிளைமாக்ஸ் காட்சியும் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுவே தற்போது இப்படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

Soori
Sasikumar
Unni Mugundan
Samthrakani

அதன்படி இரண்டாவது நாளான நேற்று தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அந்த வகையில் கருடன் படத்தின் இரண்டாவது நாள் வசூல் 5 கோடியாக உள்ளது. இது இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது மட்டும் இன்றி தற்போது பள்ளிகள் திறப்பு 10ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இது படத்திற்கு ஒரு பிளஸ் ஆக அமைந்த நிலையில் வரும் வாரம் முழுவதும் கருடன் வசூல் வேட்டையாடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

கோலிவுட்டின் அடுத்த சம்பவம் செய்யும் கருடன்

Trending News