Garudan: விடுதலை படத்தில் கதையின் நாயகனாக மிரட்டிய சூரி கருடன் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து உள்ளார். இப்படி ஒரு நடிப்பு திறமை இருக்கிறவரையா காமெடியனா வச்சு பார்த்தோம் என அவர் கொண்டாடப்பட்டு வருகிறார்.
அந்த அளவுக்கு இப்படத்தில் சொக்கன் கதாபாத்திரமாகவே அவர் வாழ்ந்துள்ளார். அதிலும் இடைவேளை காட்சியில் அவருடைய நடிப்பு ரசிகர்களுக்கான ஸ்பெஷல் ட்ரீட் என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்த அளவுக்கு படத்தில் அவர் நாய் போன்று விசுவாசமாக இருப்பதிலிருந்து மனிதனாக விஸ்வரூபம் எடுப்பது வரை அசத்தி இருக்கிறார். அதனாலயே இந்த இரண்டு நாட்களில் படம் பத்து கோடியை தாண்டி வசூலித்துள்ளது.
ஹிட் படத்தை காப்பியடித்த கருடன் டீம்
அதேபோல் கருடன் படத்திற்கான காட்சிகளும் தியேட்டர்களில் அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இப்படி வெற்றி வாகை சூடி இருக்கும் கருடன் படத்தின் கதை ஏற்கனவே வெளிவந்திருக்கிறது என்பதுதான் ஆச்சரியம்.
அதன்படி காந்தாரா மூலம் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த ரிஷப் செட்டி நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு கருடா காமன விருஷபா வாகனா என்ற படம் வந்தது. அதன் கதையும் இரு நண்பர்களை பற்றியது தான்.
கிட்டத்தட்ட அப்படத்தின் கதையை தழுவி சில மாற்றங்கள் செய்து கருடன் உருவாகி இருக்கிறது. இதை நெட்டிசன்கள் தற்போது கண்டுபிடித்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.
எது எப்படி இருந்தாலும் கருடன் இப்போது அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் வசூலும் ஏறுமுகமாக இருக்கும் நிலையில் விரைவில் இப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது திரையுலக வட்டாரம்.
கருடன் மூலம் ஆச்சரியப்படுத்திய சூரி
- வசூல் வேட்டையாடும் சூரியின் கருடன்
- அரண்மனை 4-ஐ முந்தியதா சூரியின் கருடன்.?
- விடுதலையை மிஞ்சி நடித்து ஹீரோவாக ஜெயித்தாரா சூரி.?